வனிதா விஜயகுமார் விவகாரத்தில் நடிகை கஸ்தூரியும் தயாரிப்பாளர் ரவிந்தரும் அதிரடி கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். இவர் அண்மையில் பிக்பாஸ் போட்டியின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இவர் தற்போது பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துள்ள விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர், முதல் முறையாக பீட்டர் பால், வனிதா விஜயகுமாருடன் பேட்டி அளித்தார்.
இதை தொடர்ந்து நடிகை கஸ்தூரியும் தயாரிப்பாளர் ரவிந்தரும் இவ்விவகாரத்தில் அதிரடி கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய கஸ்தூரி, ''பீட்டர் பால் எவ்வளவு தவறானவர், அவருக்கு இருக்கும் பெண்கள் சகவாசம் என என்னிடம் எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கிறது. அவர்கள் போலியாக ஒரு ஷோ நடத்தி, மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். அதை நான் எனது யூடியூப் சேனலில் வெளியிட போகிறேன்'' என பளீச்சென்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் ரவிந்தர், ''பீட்டர் பால், இன்னும் ஒரு முறை முடிந்தால், அந்த ஸ்டூடியோவில் லைவ் வந்து பேட்டி கொடுத்து காட்டுங்கள் பார்க்கலாம், அப்புறம் நான் போடுறேன் லைவ். உங்களை பற்றிய பல விஷயங்கள் ஆதாரத்துடன் எனக்கு கிடைத்துள்ளது. அதை எல்லாம் நானும் லைவ்வில் சொல்வேன்'' என அவர் தெரிவித்தார். மேலும் அவர் பீட்டர் பாலின் ஆதாங்களில் ஒன்று, ''ஊர்மிளா ஷர்மா'' என்று ஒருவரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார் ரவிந்தர்.
நடிகை கஸ்தூரி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இந்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்த வீடியோ தொகுப்பு இங்கே.,