பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையான கரீனா கபூர். தற்போது நடிகர் ஆமிர் கானுடன் லால் சிங் சத்தா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 2022 - ஏப்ரலில் இந்த படம் வெளியாக உள்ளது.
சில நாட்களுக்கு முன் நடிகர் அணில் கபூரின் மகள் நடிகை ரியா கபூர் கிறிஸ்துமஸ்க்கு பார்ட்டி கொடுத்திருந்தார். இந்தப் பார்ட்டியில் கரீனா கபூர், அம்ரிதா அரோரா விதிகளை மீறி கலந்து கொண்டனர். அடுத்ததாக இயக்குனர் கரண் ஜோகர் தனது Kabhi Khushi Kabhie Gham... படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் ஆனதையொட்டி தனது வீட்டில் சிறப்பு பார்ட்டி கொடுத்திருந்தார். இதிலும் விதிகளை மீறி கரீனா கபூர், அம்ரிதா அரோரா கலந்து கொண்டனர். இந்த படத்தில் கரீனா கபூர் முக்கிய வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கரீனா கபூர், அவரின் நீண்ட நாள் தோழி அம்ரிதா அரோரா இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகிய இருவருக்கும் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள் தனிமைபடுத்தி கோவிட் பரிசோதனை செய்ய மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கரண் ஜோகருக்கு தொற்று ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.