நடிகை கங்கனா ரனாவத், இந்தி பட உலகில் முன்னணி நடிகை, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்ததன் மூலம் பரவலான ரசிகர்களை கவர்ந்தவர்.
செம! சமந்தா தனி ஹீரோயினாக நடிக்கும் புதிய படம்.. வெளியான ரிலீஸ் தேதி!
சிறந்த நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகளை வென்றதன் மூலம் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர். 2008ம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்தார்.
அவ்வப்போது தனது மனதில் பட்ட கருத்துக்களை தெரிவித்து கங்கனா ரனாவத் சர்ச்சையை கிளப்புவார். சமீபத்தில் கெஹ்ரையன், காஷ்மீர் பைல்ஸ், கங்குபாய் படங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் விவாதத்தை கிளப்பின.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆஸ்கார், கிராமி விருதுகளில் மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் புறக்கணிக்கப்பட்டது குறித்து நடிகை கங்கனா இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், " சர்வதேச விருதுகள் என்று கூறிக்கொண்டு, அவர்களின் இனம் அல்லது சித்தாந்தங்கள் காரணமாக பழம்பெரும் கலைஞர்களை புறக்கணித்து, வேண்டுமென்றே ஒதுக்கி வைக்கும் உள்ளூர் விருதுகளுக்கு எதிராக நாம் வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்... ஆஸ்கார் மற்றும் கிராமி இரண்டு விருதுகளும் பாரத ரத்னா லதா மங்கேஷ்கர்ஜி-க்கு அஞ்சலி செலுத்தத் தவறிவிட்டனர்... நமது ஊடகங்கள் உலகளாவிய விருதுகள் என்று கூறிக்கொள்ளும் இந்த பக்கச்சார்பான உள்ளூர் நிகழ்வுகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்" என காட்டமாக கூறியுள்ளார்.
சமந்தாவைத் தொடர்ந்து ஆண்ட்ரியா.. புது பட டைட்டிலில் உள்ள வியக்க வைக்கும் ஒற்றுமை..