மும்பை: நடிகை காஜல் அகர்வால் உடற்பயிற்சி செய்யு ம் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல,அழகுராஜா, தனுஷ் உடன் மாரி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடைசியாக காஜல் அகர்வா நடிப்பில் தமிழில் கோமாளி படம் வெளியானது.
சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அவகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார். மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் திரைப்படங்கள் வெளிவரவில்லை.
திருமணத்துக்கு பின் காஜல் அகர்வால் நடிக்கும் புதிய படமான ஹே சினாமிகா படத்தின் காஜல் அகர்வால் கதாபாத்திரத்தின் முதல் லுக் போஸ்டர், முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. மலர் விழி எனும் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார்.
ஹீரோவாக துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் 'ஹே சினாமிகா' படத்தை நடன இயக்குனர் பிருந்தா இயக்குகிறார். இது இவருக்கு அறிமுக படமாகும், துல்கருடன் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைத்ரி நடிக்கின்றனர். இந்த படம் வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் நாள் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை கணவர் கௌதம் கிட்ச்லு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பின் ஒரே ஒரு புகைப்படம் கர்ப்பமான வயிறுடன் வெளியானது. காஜல் அகர்வால் சமீபத்தில் தனது கர்ப்பமான வயிறு தெரியும் படி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வாழ்த்துடன், வரவேற்பையும் பெற்றது.
பின் தனது வளைகாப்பு புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதில் ஒரு புகைப்படத்தில் பிரசவ மாதமாக மே மாதத்தை காஜல் அகர்வாலின் நண்பர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் காஜல் அகர்வால் ஏரோபிக் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை காஜல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனது எளிய கர்ப்பப் பயிற்சியின் வீடியோவைப் பகிர்ந்து காஜல் அகர்வால், "நான் எப்போதுமே மிகவும் சுறுசுறுப்பான நபராக இருந்து, என் வாழ்நாள் முழுவதும் உழைத்து வருகிறேன்.
கர்ப்பம் என்பது ஒரு வித்தியாசமான விளையாட்டு! சிக்கல்கள் இல்லாமல் கர்ப்பமாக இருக்கும் அனைத்து பெண்களும் ஏரோபிக் மற்றும் ஏரோபிக்ஸில் உடற்பயிற்சியில் பங்கேற்க ஊக்குவிக்கப்பட வேண்டும். கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக வலிமை சீரமைப்பு பயிற்சிகள் - Pilates மற்றும் barre என் கர்ப்பத்திற்கு முன்னும் பின்னும் என் உடலை சிறப்பாக மாற்ற உதவியது.இந்த மாற்றும் அணுகுமுறை உடன் என்னை வலிமையாகவும், மெலிந்ததாகவும் உணர்கிறேன்.
கர்ப்ப காலத்தில் ஏரோபிக் கண்டிஷனிங்கின் குறிக்கோள் இருக்க வேண்டும். உச்சகட்ட உடற்தகுதியை அடைய முயற்சிக்காமல் முழுவதும் நல்ல உடற்தகுதி நிலையை பராமரிக்க முயற்சி செய்ய வேண்டும்." என கூறியுள்ளார்.