www.garudavega.com

”இனிமே வாழ்க்கையே கடுமையாக மாறப்போகுது” – கர்ப்பகாலத்தில் கணவருக்காக உருகிய காஜல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்த காஜல் அகர்வால், சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களின் திருமணம் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது. அதையடுத்து காஜல் அகர்வால் தன் கணவருடன் ஹனிமூனுக்கு சென்ற புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களிடம் வாழ்த்துகளைப் பெற்றார். அதையடுத்து சில மாதங்களுக்கு முன் காஜல் அகர்வால்  தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.

Actress kajal agarwal shared pregnancy difficulties husband help

Also Read | ஜல்லிக்கட்டு காளையோடு சூர்யா… செம்ம மாஸ்ஸா புத்தாண்டு வாழ்த்து … வைரல் வீடியோ!

காஜல் அகர்வால் சமீபத்தில் தனது கர்ப்பமான வயிறு தெரியும் படி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வாழ்த்துடன், வரவேற்பையும் பெற்றது. பின் தனது வளைகாப்பு புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். வரும் மே மாதம் அவருக்கு பிரசவம் நடக்க உள்ளது. இதையடுத்து சமீபத்தில் காஜல் அகர்வால் நடனமாடி வெளியிட்டிருந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

Actress kajal agarwal shared pregnancy difficulties husband help

இந்நிலையில் காஜல் அகர்வால் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில், தான் எதிர்கொள்ளும் கர்ப்பகால பிரச்சனைகள் குறித்தும், அதற்கு கணவர் எவ்வளவு உறுதுணையாக இருக்கிறார் என்பது குறித்தும் மிகப்பெரிய பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

கர்ப்ப கால பிரச்சனைகள்…

Actress kajal agarwal shared pregnancy difficulties husband help

அவருடைய பதிவில் “ஒரு குழந்தை விரும்பக் கூடிய அப்பாவாகவும் மிகச்சிறந்த கணவனாகவும் இருப்பதற்கு நன்றி. நான் 'காலை' நேரங்களில் கர்ப்பகால பிரச்சனைகளை எதிர்கொள்ளும் எனக்காக பல உதவிகளை செய்ததற்காக நன்றி. எனக்கு சோபாவில் படுப்பது வசதியாக இருந்ததால் என்னோடு வாரக்கணக்கில் சோபாவுக்கு அருகில் படுத்துக் கொண்டதற்கு நன்றி. டாக்டருக்கு குறுஞ்செய்தி அனுப்புதல், தேவைப்படும் போது என் அம்மா வீட்டுக்கு அழைத்துச் செல்வது என தயங்காமல் எல்லா உதவிகளையும் செய்து என்னை மோசமாக உணரவைக்காமல் பார்த்துக் கொண்டதற்கு நன்றி.” என்று கூறியுள்ளார்.

Actress kajal agarwal shared pregnancy difficulties husband help

குழந்தையை நேசிக்கும் தந்தை…

மேலும் “கடந்த 8 மாதங்களில், நீங்கள் மிகவும் அன்பான அப்பாவாக மாறுவதை நான் பார்த்து வருகிறேன். இந்த குழந்தையின் மீது நீங்கள் அவ்வளவு அன்பாக இருக்கிறீர்கள். நீங்கள் என் மீது ஏற்கனவே எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்- நமது குழந்தைக்கு எந்த நிபந்தனையின்றி நேசிக்கும் ஒரு தந்தை கிடைப்பது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்று.  இனி, நமது வாழ்க்கை கடுமையாக மாறப்போகிறது. அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். நம்மால் இப்போது இருப்பது போல அதிக நேரம் தனியாக இருக்க முடியாது. ஒவ்வொரு வார இறுதியிலும் நம்மால் திரைப்படங்களுக்குச் செல்ல முடியாது. அல்லது எங்காவது சுற்றிவிட்டு, நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒருவேளை நாம் இனிமேல் முன்கூட்டியே பார்ட்டிக்கு செல்ல முடியாது. எத்தனை நாள் இரவுகள்… ஆனால் நமக்கு ஒரு அழகான குழந்தை பிறக்கும். அது நம் இதயங்களை மகிழ்ச்சியால் நிரப்பும்.” என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

Actress kajal agarwal shared pregnancy difficulties husband help

சாகசமாக மாறும் வாழ்க்கை….

மேலும் குழந்தைப் பிறப்புக்குப் பிறகான நாட்களை எதிர்கொள்வது சம்மந்தமாக “இனிமேல்… தூக்கமில்லாத இரவுகள், உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நேரங்கள், நம்மை நாமே உணராத நேரங்கள் என எதிர்கொள்ளப் போகிறோம். ஆனால் இதுவே நம் வாழ்வின் சிறந்த நேரமாகவும் இருக்கும். விஷயங்கள் மாறும். ஆனால் ஒன்று மட்டும் அப்படியே இருக்கும், அதுதான் என்னுடைய ’உங்கள் மீதான என் அன்பு’. மிகப்பெரிய சவாலை நாம் எதிர்கொள்ளப் போகும் நேரத்தில் நீங்கள் என் பக்கத்தில் இருப்பதில் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Also Read | ஜி வி பிரகாஷ் கௌதம் மேனன் நடித்த ‘செல்ஃபி’… முன்னணி ஓடிடியில் – வெளியான exciting தகவல்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress kajal agarwal shared pregnancy difficulties husband help

People looking for online information on காஜல் அகர்வால், Kajal Aggarwal, Kajal Aggarwal Pregnancy will find this news story useful.