www.garudavega.com

திடீரென காணமால் போன கார் டிரைவர்.. நிறைமாத கர்ப்பத்துடன் தேடிய காஜல் அகர்வால்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால்.

actress Kajal Agarwal outing with Baby Bump viral video

சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அவகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார்.  மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது.

actress Kajal Agarwal outing with Baby Bump viral video

திருமணத்துக்கு பின் தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் ஹே சினாமிகா படத்தில் மலர் விழி எனும் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். ஹீரோவாக துல்கர் சல்மான் நடிப்பில் உருவான 'ஹே சினாமிகா' படத்தை நடன இயக்குனர் பிருந்தா இயக்கினார். இது இவருக்கு அறிமுக படமாகும், துல்கருடன் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைத்ரி நடிப்பில் இந்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் நாள் ரிலீசானது.

actress Kajal Agarwal outing with Baby Bump viral video

சில நாட்களுக்கு முன் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை கணவர் கௌதம் கிட்ச்லு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பின் ஒரே ஒரு புகைப்படம் கர்ப்பமான வயிறுடன் வெளியானது. காஜல் அகர்வால் சமீபத்தில் தனது கர்ப்பமான வயிறு தெரியும் படி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வாழ்த்துடன், வரவேற்பையும் பெற்றது.

actress Kajal Agarwal outing with Baby Bump viral video

பின் தனது வளைகாப்பு புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதில் ஒரு புகைப்படத்தில் பிரசவ மாதமாக மே மாதத்தை காஜல் அகர்வாலின் நண்பர் குறிப்பிட்டு இருந்தார். பிரசவத்துக்கு காஜல் அகர்வாலும் ஏரோபிக் உடற்பயிற்சி செய்து தயாராகும் வீடியோவும் வெளியானது.

இந்நிலையில் சலூன் கடைக்கு சென்ற காஜல் அகர்வால் திரும்பி வரும் பொழுது கார் டிரைவர் அங்கு இல்லாமல் போக, டிரைவரை காஜல் அகர்வால் தேடும் வீடியோ வெளியாகி உள்ளது.  கர்ப்பகால செயல்முறைகள் குறித்தும் காஜல் அகர்வால் சில தகவலகளை பகிர்ந்து இருந்தார். அதில், "நான் எப்போதுமே மிகவும் சுறுசுறுப்பான நபராக இருந்து, என் வாழ்நாள் முழுவதும் உழைத்து வருகிறேன்.

கர்ப்பம் என்பது ஒரு வித்தியாசமான விளையாட்டு! சிக்கல்கள் இல்லாமல் கர்ப்பமாக இருக்கும் அனைத்து பெண்களும் ஏரோபிக் மற்றும் ஏரோபிக்ஸில் உடற்பயிற்சியில் பங்கேற்க ஊக்குவிக்கப்பட வேண்டும். கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக வலிமை சீரமைப்பு பயிற்சிகள் - Pilates மற்றும் barre என் கர்ப்பத்திற்கு முன்னும் பின்னும் என் உடலை சிறப்பாக மாற்ற உதவியது.இந்த மாற்றும் அணுகுமுறை உடன் என்னை வலிமையாகவும், மெலிந்ததாகவும் உணர்கிறேன்.

கர்ப்ப காலத்தில் ஏரோபிக் கண்டிஷனிங்கின் குறிக்கோள் இருக்க வேண்டும். உச்சகட்ட உடற்தகுதியை அடைய முயற்சிக்காமல் முழுவதும் நல்ல உடற்தகுதி நிலையை பராமரிக்க முயற்சி செய்ய வேண்டும்." என கூறியுள்ளார்.

திடீரென காணமால் போன கார் டிரைவர்.. நிறைமாத கர்ப்பத்துடன் தேடிய காஜல் அகர்வால்! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress Kajal Agarwal outing with Baby Bump viral video

People looking for online information on Baby Bump, Kajal Agarwal, Kajal Aggarwal will find this news story useful.