டெல்லி: 5ஜி தொழில்நுட்பம் அமலுக்கு வந்தால் பறவைகளும் மற்ற உயிரினங்களும் பாதிக்கப்படும் என வழக்கு தொடுத்த நடிகைக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த நிலையில், 2 லட்சமாக குறைக்கப்பட்டது.
இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக 5ஜி அறிமுகமாக உள்ளது. ஏற்கனவே 5ஜி வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் விற்பனை இந்திய சந்தையில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. 5ஜி தொழில்நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சால் பூமியிலுள்ள பல்வேறு உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எதிராக நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா தொடர்ந்திருந்தார். அது தொடர்பான வழக்கில் டெல்லி நீதிமன்றம் சுவாரஸ்யமான பதிலை தந்து தீர்ப்பளித்துள்ளது.
ஜூகி சாவ்லா
நடிகை ஜூகி சாவ்லா இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தவர். அவ்வப்போது திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து படங்களையும் தயாரித்து வருகிறார். இவர் சமூக சேவகராகவும், சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், "5ஜி இணைய சேவையை கொண்டு வருவதன் வாயிலாக தற்போது இருக்கும் கதிர்வீச்சை விட 100 மடங்கு கதிர்வீச்சு வெளிப்படும். இதன் மூலம் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இது மனிதர்களை பேராபத்திற்கு இட்டுச்செல்லும். நான் டெக்னாலாஜி மேம்பாட்டிற்கு எதிரானவள் அல்ல. ஆனால் கதிர் வீச்சுகள் அதிக தீங்கு விளைவிக்கும் என்பதற்கும் ஆரோக்கியம் மற்றும் மனிதர்களின் பாதுகாப்பை இது கடுமையாக பாதிக்கும்" எனக் குறிப்பிட்டார்.
உலகம் சுற்றும் அல்லு அர்ஜூன்... இந்த உலகில் இப்படி ஒரு இடமா! வைரல் பதிவு
20 லட்சம் அபராதம்
இதனை விசாரித்த நீதிபதி, இது முற்றிலும் தவறான தகவல். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல் என்று கூறி, ஜுஹி சாவ்லாவுக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இதனை எதிர்த்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இந்த 5ஜி தொழில்நுட்பம் சாதாரண செயல் அல்ல, மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டது என்பதை நினைவுப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது. பின்னர், ஜூகி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 20 இலட்சம் ரூபாய் அபராதத் தொகையை இரண்டு லட்சமாக குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.