அஜய் தேவ்கன் இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி எனக் கூறி டிவீட் செய்தது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
Also Read | ரிலீசான காத்துவாக்குல ரெண்டு காதல்.. படம் எப்படி இருக்கு? மக்கள் கருத்துக்கள் ஒரு பார்வை
வட இந்தியாவில் கலக்கும் தென்னிந்திய படங்கள்…
சமீபகாலமாக தென்னிந்திய படங்கள் வட இந்தியாவில் சிறப்பான வெற்றியைப் பெற்று வருகின்றன. பாகுபலி, கேஜிஎப், புஷ்பா போன்ற படங்களின் வசூல் சாதனைகளே இதற்கு சாட்சி. ஆனால் அதுபோல இந்தி படங்கள் தென்னிந்தியாவில் ஓடுவதில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் KGF -2 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, நடிகர் கிச்சா சுதீப் ஒரு நிகழ்வில் PAN-இந்தியப் படங்கள் பற்றிப் பேசினார். அதில் பல விஷயங்களைப் பேசிய அவர், "இந்தி இனி ஒரு தேசிய மொழி அல்ல" என்று கூறினார்.
சுதீப், அஜய் தேவ்கன் டிவீட்…
சுதீப்பின் இந்த கருத்துக்கு பாலிவுட் நடிகரும், நடிகை கஜோலின் கணவருமான அஜய் தேவ்கன் டிவிட்டரில் பதிலளித்திருந்தார். ஹிந்தியில் எழுதியுள்ள ட்வீட்டில், ” இந்தி நமது தேசிய மொழி இல்லை என்றால், சுதீப் ஏன் தனது படங்களை இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகிறார். இந்தி நமது தாய் மொழி, நமது தேசிய மொழி, அது எப்போதும் இருக்கும். ஜன கன மன.” என்று கேள்வி எழுப்பினார். இதன் பின்னர் சுதீப்பும், அஜய் தேவ்கனும் தங்கள் கருத்துகளை மாறி மாறி டிவீட் செய்தனர்.
திவ்யாவின் சிறப்பான பதில்…
இந்நிலையில் அஜய் தேவ்கனின் இந்த கருத்து தென்னிந்தியாவில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பலரும் சுதீப்புக்கு ஆதரவாகவும், அஜய் தேவ்கனை விமர்சித்தும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்தவரும், தமிழ் மற்றும் கன்னட சினிமாக்களில் நடித்து பிரபலமானவருமான நடிகை திவ்யா ஸ்பந்தனா அஜய் தேவ்கன் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ட்வீட் செய்துள்ளார். அஜய் தேவ்கன் டிவீட்டைப் பகிர்ந்துள்ள அவர், அதில் “இல்லை - இந்தி நமது தேசிய மொழி அல்ல. உங்கள் அறியாமை ஆச்சர்யமாக உள்ளது. KGF, புஷ்பா மற்றும் RRR போன்ற படங்கள் ஹிந்தி பேசும் மாநிலங்களில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கலைவடிவங்களுக்கு மொழி என்றுமே தடையாக இருந்தது இல்லை. உங்கள் படங்களை நாங்கள் பார்த்து ரசிப்பது போல் எங்கள் படங்களையும் ரசியுங்கள்” எனக் கூறியுள்ளார். இந்த டிவீட் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில வாரங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் அமீத் ஷா ”இந்திதான் இந்தியாவின் இணைப்பு மொழி” எனக் கூற அது சர்ச்சையானது. பின்னர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் “தமிழ் இந்தியாவின் இணைப்பு மொழி” எனக் கூறிய கருத்தும், அவர் பகிர்ந்த தமிழணங்கு ஓவியமும் வைரலானது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8