நடிகை சித்ராவின் மறைவு குறித்து நடிகர் மனோபாலா எமோஷனலாக பேசியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பல்வேறு பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த நடிகர் மனோபாலா நம்மிடம் சித்ரா குறித்து உருக்கமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ''சித்ரா மிகவும் தைரியமான பெண். சின்னத்திரையில் அவரை போன்ற ஒரு தைரியமான பெண்ணை நான் பார்த்ததில்லை.
அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை என்னால் ஏற்று கொள்ளவே முடியவில்லை. எல்லா மரணத்திலும் ஏதோ மர்மம் இருக்கும். அது போல இவரது மரணத்திலும் மர்மம் இருக்கிறது'' என் அவர் கண் கலங்க எமோஷனலாக பேசினார்.
இது குறித்து அவர் பேசிய முழு வீடியோ தொகுப்பு இதோ.