கன்னட நடிகை ஒருவர், சர்ஜரி செய்து கொண்டதன் பெயரில், உயிரிழந்த சம்பவம், பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கி உள்ளது.
கன்னட தொலைக்காட்சி நடிகைகளில் மிக பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை சேத்தனா ராஜ் (வயது 21).
இவர் சமீபத்தில், கொழுப்பைக் குறைப்பது தொடர்பாக, பெங்களூர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
அறுவை சிகிச்சையால் வந்த முடிவு?
கடந்த மே 16 ஆம் தேதி, இந்த அறுவை சிகிச்சைக்காக, தனது வீட்டில் யாரிடமும் தெரிவிக்காமல், மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின், சேத்தனாவின் நுரையீரல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர், மாரடைப்பும் ஏற்பட்டு, உயிரிழந்துள்ளார் நடிகை சேத்தனா.
குற்றம் சுமத்தும் பெற்றோர்கள்
அவருக்கு நேர்ந்த முடிவு, பலரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தி இருந்தது. சேத்தனாவின் மரணத்திற்கு தவறான சிகிச்சையும், மருத்துவர்களின் அலட்சியமும் தான் காரணம் என அவரின் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். அதே போல, தங்களிடம் தெரிவிக்காமல் இந்த சிகிச்சையை அவர் மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எங்களுக்கு எதுவும் தெரியாது..
இது தொடர்பாக, சேத்தனாவின் தந்தை வரதராஜு பேசுகையில், "எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் இந்த அறுவை சிகிச்சையை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். கொழுப்பை குறைப்பதற்காக உண்மையான தேவை இருந்தால் மட்டும் தான், அறுவை சிகிச்சையை செய்து கொள்வது பற்றி, மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும். எனது மகள் அறுவை சிகிச்சையை செய்து கொள்வதற்கு முன், அவரது நண்பர் தான் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்டுள்ளார்" என தெரிவித்துள்ளார்.
சேத்தனாவின் மரணம் தொடர்பாக வெளியான தகவலின் படி, CPR மூலம் அவரை காப்பாற்ற மருத்துவர்கள் முயன்றுள்ளனர். ஆனால், அது பலனளிக்கவில்லை என கூறப்படுகிறது. சேத்தனா எந்தவித உணர்வும் இன்றியும் இருந்துள்ளார். இதனையடுத்து, வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் நடந்ததாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றது.
பிரபல தொலைக்காட்சி நடிகையின் திடீர் மறைவுக்கு கன்னட தொலைக்காட்சி நடிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதே போல, சேத்தனாவின் மரணம் தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8