www.garudavega.com

'போட்டாச்சு END கார்டு'.. காதலர் இவர்தான்.. போட்டு உடைத்த சீரியல் நடிகை! .. விரைவில் டும் டும் டும்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பல தமிழ் சீரியல்களிலும் படங்களிலும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் மலையாள சீரியல் நடிகை சந்திரா.

actress chandra ties not with tosh christy marriage

இவர்தான் தற்போது தன்னுடைய திருமண தகவலை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். மலையாள ரசிகர்கள் மத்தியில் நடிகை சந்திரா 'மனசெல்லாம்' படத்தின் மூலம் பிரபலமாகி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டிருக்கிறார். பின்னர் சீரியல்களில் தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களில் இவர் நடிக்கத் தொடங்கினார்.

இதனை அடுத்து விஜய் டிவியில் கடந்த 2007-ல் ஒளிபரப்பாகி பல்வேறு காதலர்களையும் கவர்ந்த "காதலிக்க நேரமில்லை" சீரியலில் நாயகியாக நடித்ததன்  மூலம் தமிழ் சீரியல் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக ‘சின்னத்தம்பி’ சீரியல் நடிகர் ப்ரஜின் நடித்திருந்தார். இந்த சீரியலுக்கு தற்போது நடிகராகவும், இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் திகழும் விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.

இதனிடையே 35 வயதை கடந்த நடிகை சந்திரா 'ஸ்வந்தம் சுஜாதா' என்கிற மலையாள சீரியலில் நடித்து வருகிறார். எப்போதுமே இவரிடம் திருமணம் குறித்து கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வந்தனர். 

இந்நிலையில், முதல் முறையாக தன்னுடைய காதலரும் நடிகருமான டோஷ் கிறிஸ்டியை சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு, அவரது கைகளுடன் தமது கைகள் சேர்ந்தவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சந்திரா.

actress chandra ties not with tosh christy marriage

இது தொடர்பான தமது பதிவில், “தொடர்ந்து பலரும் கேட்டுவந்த முடிவில்லா கேள்விக்கு விடை சொல்லி end பண்ணுகிறோம்” என பதிவிட்டுள்ளதுடன், வாழ்த்து சொல்லும் அனைவருக்கும் நன்றி சொல்லி, விரைவில் திருமண தேதியை அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: wow.. விஜய் ஆண்டனியின் blockbuster ஹிட் படத்தின் sequel.. வந்தாச்சு செம்ம அப்டேட்..!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress chandra ties not with tosh christy marriage

People looking for online information on Actress chandra, Chandra, Chandra iyer, Chandra Lakshman, Chandra lakshman iyer, KaadhalikkaNeramillai, Serial, Tosh Christy, Trending, TVActress, ViayTelevision will find this news story useful.