www.garudavega.com

போடு.! BIGG BOSS-ல் நடிகை அஞ்சலி..! உடன் இணைந்த 2 பிரபலங்கள்.. வந்ததுமே செம FUNப்பா.. 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்து பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.

Actress Anjali in Bigg Boss 6 tamil Fall Web series trending

Also Read | 'வரலாறு முக்கியம்' படத்துல லேடி கெட்டப்பில் நடிகர் ஜீவா ..? வைரல் ஃபோட்டோ..! Varalaru Mukkiyam

பொம்மை டாஸ்க், அரசவை டாஸ்க், அருங்காட்சியகம் டாஸ்க், கோர்ட் டாஸ்க், பழங்குடி வெர்சஸ் ஏலியன் டாஸ்க் என அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களிடையே நிறைய வலுவான போட்டிகளும் அவ்வபோது சண்டை சச்சரவுகளும்  நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படுத்தி இருக்கின்றன.

முன்னதாக இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி மற்றும் வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா நந்தினி பங்கேற்றனர்.

Actress Anjali in Bigg Boss 6 tamil Fall Web series trending

இவர்களுள் ஜிபி முத்து முதலிலேயே சில காரணங்களால், வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி, பின்னர் அசல், ஷெரீனா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்டனர்.  அண்மையில் குயின்ஸியும் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.  இந்நிலையில்தான் விஜய் டிவி பிக்பாஸில் நடிகை அஞ்சலி பங்குபெற்றுள்ள காட்சிகள் வைரலாகி வருகின்றன.

ஆம், நடிகை அஞ்சலி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த “ஃபால்” வெப் சீரிஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் டிசம்பர் 9 முதல் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  "வெர்டிஜ்"  எனும் கனடிய வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ தழுவலாகும். இத்தொடரினை பனிஜய் ஆசியா தயாரித்துள்ளார். நடிகை அஞ்சலி, முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இத்தொடரில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் , ராஜ்மோகன் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இத்தொடரில் நடித்துள்ளனர்.

Actress Anjali in Bigg Boss 6 tamil Fall Web series trending

இப்படத்தின் புரோமோஷனுக்காக பிக்பாஸில் இணைந்த அஞ்சலி, நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் யூடியூப் பிரபல பேச்சாளர் ராஜ்மோகன் ஆகியோர் ஹவுஸ்மேட்ஸிடையே கலகலப்பாக பேசுகின்றனர். அத்துடன் ஃபால் பட கதைப்படி மாடியில் இருந்து அஞ்சலியை யாரோ தள்ளிவிட, அவர் கோமாவுக்கு போகிறார். தள்ளிவிட்டது யார் என்பதுதான் கதை. இதனால் பிக்பாஸ் வீட்டிலும் அஞ்சலி விழுந்தால் தாங்கிப்பிடிக்க தயாராக இருப்பதாக ஹவுஸ்மேட்ஸ் சிலர் அலப்பறை செய்ய, அஞ்சலியோ சந்தோஷ் பிரதாப் விழுவார், அவரை பிடியுங்கள் என கலாய்க்கிறார்.

Also Read | Anjali : “நான் அப்படி நெனைக்கல.. என் Goal அது இல்ல..!”.. பேட்டியில் கண்கலங்கிய நடிகை அஞ்சலி..! Exclusive

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress Anjali in Bigg Boss 6 tamil Fall Web series trending

People looking for online information on Ajnali in bigg boss, Bigg boss 6 tamil, Bigg boss azeem, Bigg boss tami, Janany will find this news story useful.