www.garudavega.com

மிஷ்கின் இயக்க ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு-2.. படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட் VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிசாசு-2 படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

Actress andrea jeremiah has completed the Pisasu2 Telugu dubbing

Also Read | 2022ல் உலகின் மிகச் சிறந்த 25 திரைப்படங்கள்.. இடம் பிடித்த 4 இந்திய படங்கள்! முழு தகவல்

2016-ல் இயக்குனர் பாலா தயாரிப்பில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் திரைப்பட விமர்சகர்கள்  மத்தியில்  நல்ல விமர்சனங்களை பெற்றது.

பிசாசு முதலாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிக்கும் ‘பிசாசு 2’ திரைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்குகின்றார். இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுற்று பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

Actress andrea jeremiah has completed the Pisasu2 Telugu dubbing

இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தின் டீசரும் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டீசர் தென்னக மொழிகளான தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என 4 மொழிகளிலும் வெளியானது.

Actress andrea jeremiah has completed the Pisasu2 Telugu dubbing

இந்நிலையில் படக்குழு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்புக்கு முதல் முறையாக நடிகை ஆண்ட்ரியா சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார் என அந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்புக்கு பிசாசி-2 என பெயரிடப்பட்டுள்ளது.

 

Also Read | விக்ரம் நடிக்கும் 'கோப்ரா'.. கேரளா ரிலீஸ் உரிமத்தை இவங்க தான் வாங்கிருக்காங்க!

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress andrea jeremiah has completed the Pisasu2 Telugu dubbing

People looking for online information on Andrea Jeremiah, Mysskin, Pisasu2, Pisasu2 Telugu dubbing will find this news story useful.