இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கும் விருமன் படத்தில் கதாநாயகியாக ந்டித்து முடித்துள்ளார்.
விருமன் திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார், மாநகரம் புகழ் எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, அனல் அரசு சண்டைப் பயிற்சி அளிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம், தேனி பகுதியில் தொடங்கப்பட்டது. மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் இந்த படத்தின் படபிடிப்பு 60 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி முடிவடைந்த இந்த படப்பிடிப்பு குறித்து பேசியிருந்த நடிகர் கார்த்தி, நீண்ட நாட்களுக்கு பின் மதுரை மக்களை பார்த்து சந்தோஷமடைவதாக முன்னதாக குறிப்பிட்டிருந்தார். விருமன் படம் இந்த 2022 கோடை காலத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது.
பொங்கலுக்கு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு குறித்து பட நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.
சமீபத்தில் நடிகை அதிதி ஷங்கர், சென்னை தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பாடத்தில் தேர்ச்சி அடைந்து பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்ததாக சிம்புவுக்கு ஜோடியாக கொரோனா குமார் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் சிம்புவின் 48வது திரைப்படமாகும். இந்த படத்திற்கு மாநகரம் படத்தின் இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அதிதி ஷங்கர் ரசிக பக்கத்தில் வருங்கால அடுத்த NATIONAL CRUSH என அதிதியை குறிப்பிட்டு, புஷ்பா படத்தின் சாமி சாமி பாட்டிற்கு ஆடிய நடன SNAP-ஐ பகிர, அதற்கு அதிதி சூப்பர் பதில் அளித்துள்ளார். அதில், இந்த மாதிரி போட்டோ எப்படி உங்களுக்கு கிடைக்குது" என பதில் அளித்துள்ளார்.
தற்போது NATIONAL CRUSH என நடிகை ராஷ்மிகா அழைக்கப்படுகிறார்.