தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலை அடுத்து கடந்த மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது.
இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பெரும்பான்மை தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வந்ததோடு இறுதியில் திமுக வெற்றி பெற்று தமிழகத்தின் அடுத்த ஆளும் அதிகாரத்தை பிடித்தது. இதனை அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் இருவருக்கும் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நின்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திரைத்துறையில் இளம் ஹீரோவாகவும் பயணித்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திரைத்துறை நண்பர்கள் , ரசிகர்கள் என பெரிய பட்டாளமே உண்டு. இந்த நிலைமையில் தான் போட்டியிட்ட முதல் சட்டசபை தேர்தலிலேயே உதயநிதி இப்படி வரலாறு காணாத வெற்றியை பெற்றதை அடுத்து திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Congratulations #MK_Stalin sir #UdhayanidhiStalin sir 👍 pic.twitter.com/UxveXRapoI
— Yogi Babu (@iYogiBabu) May 3, 2021
அந்த வகையில் ஹீரோவாகவும் நகைச்சுவை நடிகராகவும் கலக்கி வரும் யோகிபாபு உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் பொருட்டு சூரிய வெளிச்சத்தின் உதயநிதியுடன் இருக்கும் ஒரு வித்தியாசமான புகைப்படத்தை பதிவிட்டு தமது ட்விட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். யோகிபாபு நடித்து வெளியான மண்டேலா திரைப்படத்தில் தமது ஒரு ஓட்டு ஒட்டுமொத்த தேர்தலில் வெற்றி வேட்பாளரை தீர்மானிக்கும் சக்தியாக மாறுகிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யோகி பாபு. இந்தப்படம் தேர்தலையொட்டி விஜய் டிவியில் நேரடியாக வெளியானது. இந்த நிலையில் யோகி பாபு தெரிவித்த இந்த வாழ்த்து வைரலாகி வருகிறது.
ALSO READ: இளம் இயக்குநர் மரணம்!.. தமிழை அடுத்து கன்னடத்திலும் சோகம்!.. அதிர்ச்சியில் திரையுலகம்!