சிம்பு ஹீரோவாக நடிக்க, இயக்குநர் வெங்கட் பிரபு 'மாநாடு' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகமான 'சென்னை 28' படம் வெளியாகி இன்றுடன் 13 வருடங்கள் ஆகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான இந்த படம் நட்பு, காதல், பிரிவு என அனைத்து எமோஷன்களுடன் இளைஞர்கள் கொண்டாடும் படமாக இருந்தது. மேலும் தமிழ் சினிமாவில் ஸ்போர்ட்ஸை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் 'சென்னை 28' திரைப்படம் முக்கிய இடத்தில் இருக்கும். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களை பெரிதும் மகிழ்வித்தது.
இதன் ஒரு பகுதியாக இந்த படம் வெளியாகி நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் காமன் டிபி ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் வெங்கட் பிரபு, ''வாவ் 13 வருடங்கள்... 'சென்னை 28' படத்தின் மீதும், எங்கள் மீது காட்டிய அன்பிற்கு நன்றி. உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன் சரண் அண்ணா'' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த நடிகர் விஷ்ணு விஷால், ''சார் நம்ப முடியல. 'சென்னை 28' பட வாய்ப்புக்காக உங்களை சந்தித்து 14 வருடங்கள் ஆகிறது. காலங்கள் வேகமாக செல்கிறது. தமிழ் ரசிகர்களுக்கு இது எப்பொழுதும் ஸ்பெஷல் படமாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
Sar unbelievable...its been almost 14 years when i met you first for an opportunity in #chennai28...
Time flies🤗
Wil always be a special film for tamil audiences... https://t.co/L1e6apVwf5
— VISHNU VISHAL - stay home stay safe (@TheVishnuVishal) April 26, 2020