நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவரான விஷ்ணு விஷால் நடிப்பில் 'எஃப்ஐஆர்', 'காடன்', 'மோகன்தாஸ்' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. விஷ்ணு விஷால் தன்னுடன் கல்லூரியில் படித்த ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார். தனது மகன் ஆர்யன் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்த அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள் அவ்வப்போது வைரலாகி வருகிறது.
மேலும் அவரும் பேட்மின்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவும் தற்போது காதலித்து வருகின்றனர். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் மாலத்தீவு கடற்கரையில் தனது காதலியுடன் நேரம் செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது காதலி ஜூவாலா கட்டாவுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்து அவர் கூறும்போது "மழையில் நடனம் ஆடுங்கள். அந்த நொடியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். வலியை மறந்து விடுங்கள்" என்பதுபோல கூறியுள்ளார். அவரது ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது.