பிரபல நடிகரின் அப்பா வெளியிட்டுள்ள பாடி பில்டிங் போட்டோஸ் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஷால். இவர் தற்போது சக்ரா என்கிற படத்தில் நடித்துள்ளார். மேலும் துப்பறிவாளன்-2 திரைப்படத்தை இவர் இயக்கி நடித்து வருகிறார். விஷாலின் அப்பாவான ஜி.கே.ரெட்டி பல படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளரும் விஷாலின் தந்தையுமான ஜி.கே.ரெட்டியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 82 வயதில் விடாது உடற்பயிற்சி செய்து, உடலை கட்டுமஸ்தாக வைத்துள்ள இவரின் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் தனது யூ-டியூப் சேனல் மூலமாக ஃபிட்னஸ் சேலஞ்சையும் விடுத்து கலக்கி வருகிறார்.
இதை தொடர்ந்து, தற்போது ஜி.கே.ரெட்டி நம்மிடம் கொடுத்த பிரத்யேக பேட்டியில், தனது ஃபிட்னஸ் ரகசியங்களை பகிர்ந்து கொண்டார். தனது உடற்பயிற்சி மற்றும் உணவு முறை குறித்து, இவர் பேசிய முழு வீடியோ தொகுப்பு இதோ.