விஷால் நடிக்க, ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் உருவாகி வரும் படம் லத்தி. வரும் 22ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தை ஆர்.வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
Also Read | ‘மிரள்’ பட இயக்குநரை பாம்பு கடித்த சம்பவம்..! மருந்து வாங்க இரவில் சென்றபோது பரபரப்பு,..
நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லத்தி படத்தின் டிரைலரை வெளியிட்டார். இவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால் பேசும்போது, “ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து புரட்சி தளபதி வாழ்க என்று சொல்ல, வேண்டாம்.. நான் தளபதி அல்ல, புரட்சி தளபதியும் அல்ல. என் பெயர் விஷால் அவ்வளவு தான்..” என்று பேச்சை ஆரம்பித்தார்.
மேலும் பேசியவர், “இயக்குநர் வினோத் இப்படத்தின் கதையை சொன்ன 8 நாட்களில் சம்மதம் வாங்கிவிட்டார். முதலில், கதை கூறும் முன்பு உங்களிடம் ஒன்று கூற வேண்டும் என்றார். சொல்லுங்கள் என்றேன், நீங்கள் 8 வயது பையனுக்கு அப்பா என்றார். அதெல்லாம் சரி, நீங்கள் முதலில் கதையைக் கூறுங்கள் என்றேன். கதை கேட்டு முடித்ததும் நான் என்ன உணர்ந்தேனோ அதை பார்ப்பவர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.
80 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பில் அடி படுவதை தவிர்க்க முடியவில்லை. பீட்டர் ஹெயினின் பணியைக் கண்டு வியந்தேன். இப்படத்தில் இரண்டு பேர் பேசப்படுவார்கள். ஒருவர் யுவன் சங்கர் ராஜா, இரண்டாவது பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் பேசப்படுவார். நான் எந்த வண்டியில் சென்றாலும் பொன்.பார்த்திபனையும் அழைத்து செல்வன். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் கேட்ட விஷயங்களை செய்து தர முடியுமா? என்று சந்தேகப்பட்ட விஷயங்களை சுலபமாக செய்து கொடுத்த கலை இயக்குர் கணேஷுக்கு முக்கியமாக நன்றி கூற வேண்டும்.
மக்கள் தொடர்பாளர் ஜான்சர் சாருக்கும் நன்றி. என்னுடன் நடித்த நடிகை சுனைனாவிற்கு நன்றி. நான் சாதாரணமாகவே திருட்டு வீடியோ இருந்தால் இறங்கி கேள்வி கேட்பேன். இப்போது லத்தி வேறு கையில் இருக்கிறது. ஆகையால், அனைவரும் திரையரங்கிற்கு வந்து படத்தை பாருங்கள்” நன்றி என்று பேசினார்.
Also Read | புதிய படத்துக்காக முதல் முறை கைகோர்க்கும் GV பிரகாஷ் & ஐஸ்வர்யா ராஜேஷ்.!