நடிகர் விஷால் பாஜகவில் இணையப் போவதாக வந்த தகவலை அடுத்து, தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் தற்போது சக்ரா என்கிற படம் தயாராகியுள்ளது. மேலும் இவர் துப்பறிவாளன்-2 படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும் விஷால் அரசியல் சார்ந்த விஷயங்களிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஷால் பா.ஜ.கவில் இணையப் போவதாக அண்மையில் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதை தொடர்ந்து, உடனடியாக விஷால் தனது அதிரடி ஸ்டேட்மென்டை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நான் பாஜகவில் இணையவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.