மும்பையில் உள்ள நடிகை கங்கனா ரனாவத்தின் அலுவலகம் விதிமீறல்கள் என்று கூறி அதிகாரிகளால் பகுதியளவு தகர்க்கப்பட்டது. இவர் தாம்தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத்துக்கு எதிராக பேசியதற்காக, இபப்டி நடந்தது என்று சிலர் பரப்பி வருகின்றனர்.
இப்போது, விஷால் கங்கனாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் எழுதியுள்ள பதிவில், "டியர் கங்கனா, உங்கள் தைரியத்துக்கு தலை வணங்குகிறேன், எது சரி & எது தவறு என்று குரல் கொடுக்க நீங்கள் யோசித்ததே இல்லை. இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை அல்ல, ஆனால் அரசாங்கத்தின் கோபத்தை தைரியமாக எதிர் கொண்டீர்கள், இது ஒரு பெரிய முன்உதாரணம்.
1920களில் பகத்சிங் செய்தது போல தான் இதுவும். எது ஒன்றும் சரியாக இல்லாத போது அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்க இது பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும். இதுவே கருத்துச் சுதந்திரம். உங்களுக்கு நன்றி, நான் உங்களுக்கு தலை வணங்குகிறேன்" என்று கூறியுள்ளார்.