டாணாக்காரனுக்குப் பிறகு விக்ரம் பிரபு நடிக்கும் படம்… TITLE உடன் வெளியான மிரட்டலான போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Actor vikram prabhu next movie title announced

Also Read | இந்த தடவையாவது மாட்டுவாரா..? முதல்முறை கோபி vs ராதிகா… பாக்கியலட்சுமி சீரியலில் பரபரப்பு!

விக்ரம்பிரபு.,..

நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து மூன்றாவது தலைமுறை நடிகராக அறிமுகமானவர் அவரின் பேரன் விக்ரம் பிரபு. பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான கும்கி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்புத் திறமையை நிரூபித்தார். அடுத்தடுத்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

Actor vikram prabhu next movie title announced

டாணாக்காரன்…

விக்ரம் பிரபு நடிப்பில் எஸ் ஆர் பிரபுவின் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த டாணாக்காரன் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி ரிலீஸானது. இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபுவோடு அஞ்சலி நாயர். எம் எஸ் பாஸ்கர், லால் மற்றும் போஸ் வெங்கட்  உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். போலிஸ் பயிற்சிக்கு செல்லும் இளைஞர் வேடத்தில் இந்த படத்தில் விக்ரம் பிரபு நடித்திருந்தார். விமர்சன ரீதியாக இந்த படம் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றது. இதையடுத்து விக்ரம் பிரபு அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Actor vikram prabhu next movie title announced

இரத்தமும் சதையும்…

இந்நிலையில் இன்று விக்ரம் பிரபு அடுத்து நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் கார்த்திக் அட்வித் தயாரிக்க, விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு “இரத்தமும் சதையும்” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதையை எழுதி, அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்குகிறார்.

Actor vikram prabhu next movie title announced

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் ‘இரத்தமும் சதையும்’ படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது துவங்கப்பட்டு பரபரப்பாக நடைபற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Also Read | கையில் Trips உடன் ‘CWC’ சிவாங்கி… என்ன ஆச்சு?... அவரே வெளியிட்ட புகைப்படம்!

Nenjuku Needhi Home

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor vikram prabhu next movie title announced

People looking for online information on Vikram Prabhu, Vikram prabhu next movie, Vikram prabhu next movie updates will find this news story useful.