BREAKING: விஜய் சேதுபதிக்கு FAREWELL … PAN இந்தியா ரிலீஸ்… ‘விடுதலை’ பற்றி வெளியான EXCLUSIVE தகவல்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விடுதலை படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.

Actor vijay sethupathi portions wrapped in viduthalai

Also Read | தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் ‘தி கிரே மேன்’… டிவிட்டரில் சிறப்பான சம்பவம்

விடுதலை…

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’ மற்றும் 'பாவக்கதைகள்' (ஒரு இரவு) படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து இயக்கும் படமாக “விடுதலை” உருவாகி வருகிறது. இந்த படத்தின் மூலம் முதல்முதலாக இசைஞானி இளையராஜாவோடு பணியாற்றுகிறார் வெற்றிமாறன். விடுதலை திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது.

Actor vijay sethupathi portions wrapped in viduthalai

பிரபலக் கலைஞர்கள்…

இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற நக்சலைட் போராளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சூரி போலீசாக நடிக்கிறார். இந்த படத்துக்கு வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சி இயக்குனராக பணியாற்றுகிறார். இந்தப்படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார்.

Actor vijay sethupathi portions wrapped in viduthalai

விடுதலை படப்பிடிப்பு…

முன்னதாக விடுதலை படத்தின் முக்கிய படப்பிடிப்புகள் சத்தியமங்கலம், திண்டுக்கல் சிறுமலை, பன்ருட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் விடுதலை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் துவங்கியது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வனப்பகுதிகளில் நடந்து வருகிறது.

Actor vijay sethupathi portions wrapped in viduthalai

விடுதலை Breaking தகவல்கள்…

இந்நிலையில் விடுதலைப் படத்தின் ஷூட்டிங் பற்றி நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து பிரேக்கிங் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி படத்தில் விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. அடுத்து சூரி மற்றும் பவானி ஸ்ரீ சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த காட்சிகள் திண்டுக்கல்லை அடுத்துள்ள சிறுமலை பகுதிகளில் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் போலீஸ் அதிகாரியாக ஒரு கௌரவ வேடத்தில் நடிப்பதாகவும், மற்றொரு இயக்குனரான பாலாஜி சக்திவேல் ஒரு முக்கியவேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மொத்த படப்பிடிப்பும் ஜூன் 5 ஆம் தேதி நிறைவடையும் என சொல்லப்படுகிறது. மேலும் படத்தை பேன் இந்தியா ரிலீஸாக கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | Breaking: போடு! மலையாள Bigg Boss-ல் மோகன்லாலுடன் கமல்… surprise தகவல்

Nenjuku Needhi Home

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor vijay sethupathi portions wrapped in viduthalai

People looking for online information on Viduthalai Movie, Viduthalai Movie Updates, Vijay Sethupathi will find this news story useful.