www.garudavega.com

தீ இது தளபதி.. எண்ட்ரி ஆன ஒரே நாளில் இன்ஸ்டாவில் ரெக்கார்டு படைத்த நடிகர் விஜய்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். 90களில் இருந்தே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், தற்போது 2கே கிட்ஸ்களையும் கவர்ந்துள்ளார்.

Actor Vijay record in earning much Instagram followers

தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்துவருகிறார் நடிகர் விஜய். இந்தத் திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், ப்ரியா ஆனந்த், கௌதம் மேனன், அர்ஜூன் உள்ளிட்ட பலரும் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்கின்றனர். அண்மையில் காஷ்மீரில் படப்பிடிப்பு தொடங்கிய இந்த திரைப்படத்தின் மேற்கொண்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என்று தகவல்கள் தெரிய வந்துள்ளன. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில்தான் நடிகர் விஜய் தம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அதிகாரப்பூர்வ கணக்கை தற்போது தொடங்கி இருக்கிறார். அவர் அக்கவுண்ட் தொடங்கிய முதல் நாளிலேயே ஹாய் நண்பா நண்பீஸ்.. என்று பதிவிட்டு ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படம் பதிவிடப்பட்ட 24 மணி நேரத்தில் 4 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது. அத்துடன் முதல் 99 நிமிடத்தில் நடிகர் விஜய் 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார். இதுவரை சுமார் 4.7 மில்லியனுக்கும் (சுமார் 47 லட்சம்) மேலான ரசிகர்கள் விஜய்யை இன்ஸ்டாகிராமில் பின்தொடர தொடங்கி இருக்கின்றனர்.

இதற்கு முன்னதாக உலக அளவில் கொரியன் இசைக் குழுவான பிடிஎஸ் குழுவை சேர்ந்த வி எனப்படும் கிம் டேஹ்யுங் சுமார் 43 நிமிடத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து 59 நிமிடத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்று ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். தற்போது விஜய் 99 நிமிடத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்று மூன்றாவது இடத்தில் இருப்பதாக குறிப்பிடும் விஜய் ரசிகர்கள் இந்த தகவலை உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vijay record in earning much Instagram followers

People looking for online information on Thalapathy, Thalapathy Vijay, Vijay will find this news story useful.