பாடகர் எஸ்பிபியின் மறைவு ரசிகர்களுக்கு மீளாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து அவர்கள் ரசித்தவற்றை வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது அவரது உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு அவரது மகன் எஸ்.பி.பி.சரண் அவருக்கு செய்ய வேண்டிய இறுதிச்சடங்கை செய்து வருகிறார். அதன் பிறகு அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது. தற்போது பிரபலங்கள், ரசிகர்கள் என ஒரு சேர நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஜய் பாடகர் எஸ்பிபியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் எஸ்பிபியின் மகன் எஸ்பிபி சரணிடம் ஆறுதல் கூறினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.