இந்திய சினிமா ஒளிப்பதிவாளர்களின் பெருமைமிகு கௌரவமான ISC (Indian Society of Cinematographers) அமைப்பில் உறுப்பினரவாது என்பது அனைத்து ஒளிப்பதிவாளர்களின் கனவாக இருக்கும்.
இந்த இந்திய ஒளிப்பதிவாளார்கள் சொசைட்டி (Indian Society of Cinematographers) ISC அமைப்பை 28 டிசம்பர் 1995 அன்று சினிமாவின் நூற்றாண்டை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டது. உலக ஒளிப்பதிவின் அழகியலை மறுவரையறை செய்த பிரபல ஒளிப்பதிவாளர் சுப்ரதா மித்ரா இந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கினார்.
அமைப்பின் உருவாக்க உறுப்பினர்களாக இந்தியாவின் தலைச்சிறந்த ஒளிப்பதிவாளர்களான அணில் மேத்தா, ராமசந்திர பாபு, சன்னி ஜோஸப், பி.சி. ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், கே.வி. ஆனந்த், வேணு, ரவி. கே. சந்திரன், மது அம்பத் ஆகியோர் உள்ளனர். மொத்தம் 100க்கும் குறைந்த பேர்களை மட்டுமே இந்த அமைப்பு கொண்டுள்ளது.
அப்படி தற்போது உறுப்பினராக இருப்பவர்களில் சிலர் பின்வருமாறு.
V. மணிகண்டன், R. D. ராஜசேகர், நீரவ் ஷா, பி.எஸ். வினோத், திருநாவுக்கரசு, மதி, ராஜிவ் ரவி, ரத்னவேல், வேல் ராஜ், சுகுமார், செழியன், சத்யன் சூரியன், கிரிஷ் கங்காதரன், நடராஜ் சுப்ரமணியம், S R கதிர் போன்றோர் முக்கியமானவர்கள்.
இந்த அமைப்பில் உறுப்பினராக அமைப்பின் 18 விதிகளுக்கு உட்பட வேண்டும். அதில் மிக முக்கியமான விதி குறைந்தது ஏழு வருடம் ஒளிப்பதிவாளராக தொடர்ந்து ஒய்வின்றி பணியாற்றி இருக்க வேண்டும். அதோடு கற்பனைத்திறனும், புதுமையான உத்திகளும், உயர் தொழில்நுட்ப திறனும் கொண்டு ஒளிப்பதிவு செய்து இருக்க வேண்டும், போன்ற விதிகள் அவை.
தற்போது இந்த அமைப்பில், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் வாழ்நாள் உறுப்பினராக ஆகியுள்ளார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இவர் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவின் உதவியாளராக, இந்திய சினிமாவில் ஒளிப்பதிவில் திருப்புமுனை ஏற்படுத்திய இயக்குனர் விஷ்னுவர்தன் இயக்கி தல அஜித் நடித்த பில்லா (2007) படத்தில் இரண்டாவது கேமராமேனாக பணியாற்றியவர்.
அட்லி இயக்கத்தில் ராஜாராணி படம் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் தளபதி விஜய்யுடன் கத்தி, தெறி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இவர் நானும் ரவுடி தான், ஹீரோ, இரும்புத்திரை போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Glory to God
Truly Humbled and elated to be part of Indian society of cinematographers .its a privilege to learn upclose from the legends who have inspired and motivated me.I believe this is the best recognition for me.Looking forward for this journey 🙂 pic.twitter.com/0MPu0PVjN5
— george c williams ISC (@george_dop) August 18, 2021
தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.