இயக்குனரும் எழுத்தாளருமான மாரி செல்வராஜ் இயக்கி வரும் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
Also Read | கட்டிப்பிடிச்சு சிரிக்க வச்ச நயன்தாரா… அவங்க நடிப்ப பத்தி சமந்தா சொன்ன கமெண்ட் – வைரல் story
மாரி செல்வராஜின் கவிதைத் தொகுப்பு…
தமிழ் சினிமாவில் இயக்குனராவதற்கு முன்பாகவே எழுத்தாளராக அறியப்பட்டவர் மாரி செல்வராஜ். இவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் மற்றும் மறக்கவே நினைக்கிறேன் உள்ளிட்ட புத்தகங்கள் அவருக்கு பரவலான கவனத்தைப் பெற்று தந்தது. அவர் சில கவிதைகளும் எழுதியுள்ளார். இந்நிலையில் இப்போது அவரின் கவிதை தொகுப்பான ‘உச்சினியென்பது’ என்ற புத்தகத்தை கவிஞர் வெய்யிலின் கொம்பு பதிப்பகம் வெளியிடுகிறது. இந்த நூலை மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்துவரும் வைகைப்புயல் வடிவேலு வெளியிட்டுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
வடிவேலு வெளியிட்ட புத்தகம்…
மேலும் மாரி செல்வராஜ் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “நண்பரும் கவிஞருமான வெய்யில் அவர்களின் கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக எனது முதல் கவிதை தொகுப்பாக “உச்சினியென்பது” வருகிறது. வலுக்கட்டாயமாக பெரும் ப்ரியத்தோடு வெளியிடும் கொம்பு பதிப்பகத்திறகும் நண்பர் வெய்யிலுக்கு அத்தனை நன்றி. ஆவேசத்தோடு அவ்வப்போது நான் எழுதிய சொற்களை கவிதைகள் என கண்டுணர்ந்து அதை தொகுத்து கொடுத்த நண்பர் அகரமுதல்வனுக்கும் நன்றியும் ப்ரியமும்.
அப்புறம் வேறன்ன இந்த நூலை பற்றியும் என் வாழ்வை பற்றியும் கேட்டு தெரிந்து எனக்குள் நெருங்கி மகிழ்ச்சியோடு நூலை வெளியிட்ட நடிகர் வடிவேல் சாருக்கு நன்றியும் முத்தமும். எனது முதல் கவிதை தொகுப்பான இந்த நூலை கலையை களத்திற்கு இழுத்து வந்த அண்ணன் பா. இரஞ்சித் அவர்களுக்கு சமர்பிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.” எனக் கூறியுள்ளார்.
Also Read | “கல்யாணத்துக்கு பிறகு கஷ்டப்பட்டு வாங்குனது..”… அச்சோ என்ன ஆச்சு? - CWC மணிமேகலை பதிவு!