சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தை பார்த்த வடிவேலு அதுகுறித்து எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.
சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, விவேக் பிரசன்னா, காளி வெங்கட், ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்டோ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இத்திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்நிலையில் சூரரைப் போற்று படத்தை பார்த்த நடிகர் வடிவேலு அதுகுறித்து எமோஷனலாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், ''தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்'' என பாராட்டியுள்ளார்.
தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 👏💐@Suriya_offl #SooraraiPottru
— Actor Vadivelu (@VadiveluOffl) November 13, 2020