நடிகர் சுஷாந்த் சிங்கின் நண்பர், அவரது முன்னாள் காதலி ஏன் பிரேக்-அப் செய்தார் என தெரிவித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வந்த சுஷாந்த் சிங், அண்மையில் தற்கொலை செய்து கொண்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலிவுட் சினிமாவில் நிலவும் Nepotism-தான் இதன் காரணம் எனவும், சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார் எனவும் கூறப்பட்டது. இதனிடையே சுஷாந்த் சிங்கின் காதலியும் நடிகையுமான ரியாவுக்கு அவரது தற்கொலை தொடர்பிருப்பதாக பரபரப்பு திருப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் நடிகர் சுஷாந்தின் நண்பர் சாமுவேல் என்பவர் ஒரு புதிய தகவலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ''கேதர்நாத் படத்தின் சமயத்தில், சுஷாந்தும் சாரா அலி கானும் முழுமையாக காதலில் இருந்தனர். அவர்கள் பிரிக்க முடியாதபடி இருந்தார்கள். ஒருவருக்கு ஒருவர் மரியாதை வைத்து கொண்டிருந்தனர். அது இப்போது இருக்கும் காதலர்களிடையே அபூர்வமானது.
சாரா சுஷாந்த் மீதும் அவரது, குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரின் மீது பெரும் மரியாதை கொண்டிருந்தார். ஆனால் சாரா காதலை முறித்து கொண்டது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. அது சுஷாந்த் நடித்த சோன்ச்சிரியா படத்தின் ஃப்ளாப்புக்கு பிறகு அவர் பிரேக் அப் செய்ததில், பாலிவுட் மாஃபியாவின் பின்னணியாக கூட இருக்கலாம்'' என அவர் பதிவிட்டுள்ளார்.