சமீப காலமாகவே இந்திய சினிமாவில் துக்க நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கலைஞர்கள் பலரும் ஒன்றன்பின் ஒன்றாக மரித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த வகையில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்போது மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மன அழுத்தம் தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று பலரும் கூறி வரும் நிலையில், இது தற்கொலை அல்ல கொலை என்று அவரது குடும்பத்தினர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர் பேட்டி அளித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் மனதை உடைக்கும் வகையில் அவர் பேசியது "உண்மையை சொல்கிறேன் நான் மிகவும் சுவாரஸ்யம் இல்லாத ஒரு மனிதன் எனக்கு வெறும் இரண்டு நண்பர்கள் தான் இருக்கிறார்கள் என்னால் நிறைய நண்பர்களை சேகரிக்க முடியாது. அதற்காக எனக்கு மனிதர்களை பிடிக்காது என்று இல்லை. எனக்கு மனிதர்களை பிடிக்கும் ஆனால் எப்படியோ மற்றவர்களுக்கு எனது பேச்சுகள் சுவாரசியம் இல்லாமல் போய்விடுகின்றன. முதலில் அவர்கள் என்னை பிடிப்பது போல் பாவனை செய்தாலும் பின்பு எனது அழைப்புகளை ஏற்பது இல்லை" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
Some of us might have seen this video in the past and wondered "He is just being modest. I'm sure he is a fun person to hangout with." What we forget is that celebrities are also humans. They also have the same innate needs like the rest of us. #SushantNoMore pic.twitter.com/ZvRVJYM0yB
— Rarephotoclub (@rarephotoclub) June 15, 2020
மன அழுத்தம் எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.