பல வருடங்களுக்கு பிறகு இந்திய கலைஞர்கள் ஆஸ்கர் விருது பெற்று சாதனை செய்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சூர்யா நெகிழ்ச்சி போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | ஆஸ்கரை தட்டி தூக்கிய இந்திய கலைஞர்கள்.. ஜெய்ஹோ சொல்லி வாழ்த்திய இசைப்புயல்.. வைரலாகும் போஸ்ட்..!
ஆஸ்கர் 2023
சினிமா கலைஞர்களின் உச்சபட்ச கனவாக இருக்க கூடியது ஆஸ்கர் விருதை வெல்வதாகத்தான் இருக்கும். உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த திரைபடங்களை, கலைஞர்களை அங்கீகரித்து விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சையுடன் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். இதில் RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல் The Elephant Whisperers சிறந்த ஆவண குறும்பட பிரிவில் இப்படம் ஆஸ்கார் விருது வென்றுள்ளது.
நாட்டு நாட்டு
பிரபல இசையமைப்பாளர் மரகதமணி எனும் கீரவாணி இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இதில் சிறந்த பாடலுக்கான விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றது. இசையமைப்பாளர் கீரவாணி விருதை பெற்றுக் கொண்டார். அது முதல் ஆஸ்கரை வெல்லுமா நாட்டு நாட்டு பாடல்? என ரசிகர்களுக்கு மத்தியில் கேள்வி எழுந்தது. கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை வென்றிருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில்,"RRR படக்குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நாட்டு நாட்டு பாடலுக்கான விருது MM கீரவாணி அவர்களுக்கு சிறப்பு வாய்ந்த அங்கீகாரம். இந்த சிறப்பான நிகழ்வில் நீங்கள் கலந்துகொண்டது மிக்க மகிழ்ச்சி" என குறிப்பிட்டு இயக்குநர் ராஜமவுலி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்டோரை சூர்யா டேக் செய்திருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
The Elephant Whisperers
தமிழ்நாட்டின் முதுமலையை களமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் யானைகளை பராமரித்து வரும் பொம்மா மற்றும் பெல்லி என்ற தம்பதியினரின் வாழ்க்கை முறை, யானையுடனான அவர்களது பிணைப்பு குறித்து அழகியலுடன் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த படத்தை இயக்கிய கார்த்திகி கான்சால்வேஸ் மற்றும் தயாரித்த குனித் மோங்கா ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டார்கள்.
இந்நிலையில் The Elephant Whisperers படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள சூர்யா," கார்த்திகி கான்சால்வேஸ், உங்களுக்கும் உங்களுடைய குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுடைய அயராத முயற்சியின் மூலம் இந்த படத்தை உருவாக்கி தகுதி வாய்ந்த அகாடமி விருதையும் பெற்றிருக்கிறீர்கள். ஆஸ்கர் விருதை இந்தியா வெல்வதை பார்ப்பது பெருமையாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்தின் தயாரிப்பாளர் குனித் மோங்கா உள்ளிட்டோரையும் அவர் டேக் செய்திருக்கிறார்.
Hearty congratulations to you and your Team @EarthSpectrum Kartiki Gonsalves, for your tireless effort in making #ElephantWhisperers & winning a much deserved @TheAcademy award. Proud to see India winning at #Oscars95 @guneetm @netflix well done! https://t.co/RbVkopqyp4
— Suriya Sivakumar (@Suriya_offl) March 13, 2023
Mighty congratulations to Team @RRRMovie !!! @TheAcademy award for #NattuNattu is a recognition of your excellence @mmkeeravaani sir. Super glad to see the vision of @ssrajamouli sir shine at #Oscars95 @boselyricist @Rahulsipligunj @kaalabhairava7 India shines! pic.twitter.com/D3ghPxWJ9T
— Suriya Sivakumar (@Suriya_offl) March 13, 2023
Also Read | "நாம சாதிச்சுட்டோம்".. ஆஸ்கர் விருதுடன் ஜூனியர் NTR.. உருக்கமான பதிவு..!