சூர்யா தயாரித்துள்ள ஓ மை டாக் திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.
Also Read | ”முஸ்லிம் பொண்ணா இருந்துட்டு… எப்படி அந்த character-ல”… நஸ்ரியா சொன்ன Thug reply !
சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட்…
சூர்யாவின் தயாரிப்பில், சூரரைப் போற்று, ஜெய்பீம், உடன்பிறப்பே, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் உள்ளிட்ட திரைப்படங்கள் நேரடியாக ப்ரைம் வீடியோவில் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது 'ஓ மை டாக்' திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.
ஓ மை டாக் கலைஞர்கள்….
நடிகர் அருண் விஜய் மற்றும் அவரது மகன் அர்னவ் விஜய் (அறிமுகம்) மற்றும் அருண் விஜய்யின் தந்தை விஜய்குமார் ஆகிய மூவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள "ஓ மை டாக்" (oh my dog) திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்தினை நடிகர் சூர்யாவின் "2D என்டர்டெய்ன்மென்ட்" நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் சரோவ் ஷண்முகம் எழுதி இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நாய் ஒன்றும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. படத்தில் வினய் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கதைக்களம்…
அர்ஜுன் கதாபாத்திரத்தில் வரும் அர்னவ் மற்றும் கண் பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பா பற்றிய நெகிழ வைக்கும் கதையாகவும் இது உருவாகியுள்ளது. குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் பார்த்து மகிழக் கூடிய வகையிலும் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். அரியவகை நாய் ஒன்று சிறுவனிடம் கிடைக்க அதை அபகரிக்க நினைக்கும் கூட்டத்தோடு நடக்கும் மோதலே கதை என்பது டீசர் மற்றும் டிரைலர் மூலம் தெரியவருகிறது.
ரிலீஸும் வரவேற்பும்….
இந்த படம் தற்போது அமேசான் ப்ரைமில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு இருக்கிறது. இந்த படம் குழந்தைகள் விரும்பும் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திரைத்துறையினரும் பிரபலங்களும் இந்த படத்தைப் பாராட்டி பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவனான ஜாண்ட்டி ரோட்ஸ் இந்த படம் பற்றி டிவீட் செய்துள்ளார். அதில் “வளர்ப்புப் பிராணிகளின் ஆர்வலராக நான் இந்த படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன்” எனக் கூறியிருந்தார்.
அந்த டிவீட்டைப் பகிர்ந்துள்ள ஓ மை டாக் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா “நன்றி.. நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன். உங்கள் மகள் இந்தியா ரோட்ஸுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும்” என நம்புகிறேன்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8