ஜெய்பீம் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆவதை ஒட்டி நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார்.
Also Read | விஷ்ணு விஷால் & 'பூங்குழலி' ஐஸ்வர்யா லெஷ்மி நடிக்கும் புதிய படம்.. வெளியான FIRST LOOK POSTER!
ஜெய் பீம்' திரைப்படம் கடந்தாண்டு அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆனது.
'ஜெய் பீம்' திரைப்படம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு இயக்குனர் த.செ.ஞானவேல் கதையை உருவாக்கினார். இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்தார்.
பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழ்க்கறிஞராக, முன்னாள் நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு பகுதியை எடுத்து இந்த திரைப்படம் உருவானது. படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்தார். ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்தார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டராக ஃபிலோமின்ராஜா & கலை இயக்குநராக கதிர் ஆகியோர் பணியாற்றினர்.
'ஜெய்பீம்' ரிலீசான சமயத்தில் படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித், நல்லகண்ணு, சத்யராஜ், சீமான், பாரதிராஜா உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பல வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்தப் படத்திற்கு ஏராளமான பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்தது.
ஆஸ்கார் விருது யூடியூப் சேனலில் ஜெய்பீம் திரைப்படத்தின் காட்சி இடம் பெற்றது. முதன்முதலாக தமிழ் படங்களில் ஜெய்பீம் படத்தின் காட்சி தான் ஆஸ்கார் யூடியூப்பில் இடம் பிடித்தது. மேலும் 94 வது ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் (சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் 276 படங்களில்) ஒரு படமாக ஜெய்பீம் இடம் பெற்றது.
மேலும் ஒரு மணிமகுடமாக கோல்டன் குளோப் விருதுக்கு ‘சிறந்த ஆங்கிலம் அல்லாத திரைப்பட’த்துக்கான பிரிவில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் இந்தியா சார்பாக இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படம் வெளியாகி ஒரு வருடம் ஆவதை ஒட்டி நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், #JaiBhim-இன் ஓராண்டு விழாவைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். திரைக்கதை முதல் இயக்கம் வரை இந்தப் படம் மேலும் மேலும் வலுவடைந்து கொண்டே இருந்தது.. இந்த அர்த்தமுள்ள படத்தை எங்களுக்கு வழங்கிய என் சகோதரன் ஞானவேல் & Teamக்கு நன்றி. வக்கீல் சந்துரு என் கேரியரில் மைல்கல் ரோல்!" என சூர்யா ட்வீட் செய்துள்ளார்.
Happy to celebrate one year of #JaiBhim From script to execution this film kept getting stronger & stronger.. I thank my brother @tjgnan Gnanavel & Team for giving us this most meaningful film. Lawyer Chandru is a landmark role in my career! https://t.co/iSLn1Tj3ir
— Suriya Sivakumar (@Suriya_offl) November 2, 2022
Also Read | சீதா மகாலட்சுமியை அமெரிக்காவில் சந்தித்த ராம்! மிருணாள் தாகூர் பகிர்ந்த வைரல் ஃபோட்டோ!