நடிகர் சூர்யாவின் திடீர் முடிவு... அவர் படங்களில் இருந்த முக்கிய நபர் மாற்றம்... காரணம் என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. அவரது படங்கள் தமிழ் தவிர பிற மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்படுகின்றன. அப்படியே தெலுங்கு மொழியிலும் அவருக்கு ஏராளமான  ரசிகர்கள் உண்டு. அவரது தெலுங்கு மொழி படங்கள் அனைத்திலும் இதுவரை ஸ்ரீனிவாஸ மூர்த்தி என்ற டப்பிங் கலைஞர் தான் குரல் கொடுத்து வந்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் திடீர் முடிவு முக்கிய நபர் மாற்றம் actor suriya to make a big change in his upcoming project Aakaasam Ni Haddu Ra

இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படம் தெலுங்கில் ஆகாசம் நீ ஹதுரா என்ற பெயரில் ரிலீசாகிறது. ஆனால் இந்த படத்தில் நடிகர் சூர்யா தனது டப்பிங் கலைஞரை மாற்றியுள்ளார். பிரபல நடிகர் 'சத்தியதேவ்' அவருக்கு டப்பிங் பேசி உள்ளாராம். அவரது குரல் இந்தப் படத்திற்கு இன்னும் சரியாக இருக்கும் என்பதால் இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் சூர்யாவின் திடீர் முடிவு முக்கிய நபர் மாற்றம் actor suriya to make a big change in his upcoming project Aakaasam Ni Haddu Ra

People looking for online information on Soorarai Pottru, Sudha Kongara, Suriya will find this news story useful.