www.garudavega.com

25 YEARS OF SURIYA: சினிமாவுல 25 வருஷம் பயணம்.. நடிகர் சூர்யா பதிவிட்ட நெகிழ்ச்சி ட்வீட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம், தமிழ் திரை உலகில் நடிகராக அறிமுகம் ஆனவர் சூர்யா.

actor suriya completed 25 years in cinema tweets about it

Also Read | 3:33 லக்கி நம்பரா? ரசிகரின் கேள்விக்கு பதில் சொன்ன 'கோப்ரா' இயக்குனர் அஜய் ஞானமுத்து!

இதனைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா நடித்த ஃப்ரெண்ட்ஸ், நந்தா, காக்க காக்க, பிதாமகன் உள்ளிட்ட பல திரைப்படங்கள், அவரது நடிப்பின் பல பரிணாமங்களை திரையில் காண்பித்து ஏராளாமான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கவும் வழி செய்திருந்தது.

இப்படி ஏராளமான வித்தியசமான கதைக் களங்களை கொண்ட படங்களை நடித்து வந்த சூர்யாவின் நடிப்பில், கடந்த சில ஆண்டுகளில் வெளியாகி இருந்த சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் என்ற தேசிய விருதும் சூர்யாவுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

actor suriya completed 25 years in cinema tweets about it

அதே போல, நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இருந்த 'விக்ரம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சூர்யா. சுமார் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே சூர்யா தோன்றி இருந்தாலும், அவரது வில்லத்தனமான நடிப்பு, மக்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருந்தது.

actor suriya completed 25 years in cinema tweets about it

இதற்கு அடுத்தபடியாக, பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிப்பதிலும் நடிகர் சூர்யா கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு நடுவே, 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் ஏராளமான சிறந்த படங்களையும் சூர்யா தயாரித்துள்ளார்.

actor suriya completed 25 years in cinema tweets about it

இந்நிலையில், சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 25 ஆண்டுகள் நிறைவு செய்தது தொடர்பாக, ட்விட்டரில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் சூர்யா. கடந்த 25 ஆண்டுகளில், ஏராளமான சிறந்த திரைப்படங்களை கொடுத்துள்ள சூர்யாவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர், தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, தன்னுடைய  25 ஆண்டுகள் திரைப்பயணம் தொடர்பாக ட்வீட் செய்துள்ள நடிகர் சூர்யா, "நிஜமாக மிகவும் அழகான மற்றும் பாக்கியம் பெற்ற 25 ஆண்டுகள். கனவு காணுங்கள், நம்புங்கள். உங்கள் சூர்யா" என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | Megham Karukatha: திருச்சிற்றம்பலம் மேகம் கருக்காதோ பாட்டுக்கு டான்ஸ்.. வைரலான ஜப்பான் ஜோடி.!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor suriya completed 25 years in cinema tweets about it

People looking for online information on 25 years of Suriya, Suriya will find this news story useful.