ரசிகரின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா தனது கையால் தாலி எடுத்து கொடுத்துள்ளார். சூர்யா நற்பணி இயக்க வட சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மற்றும் ஐ.டி. விங் தலைவர் ஹரி ராஜ் - பிரியா திருமணத்திற்கு நடிகர் சூர்யா நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். இந்த் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் சூர்யா மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து சிறப்பாக இத்திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்வில் அகில இந்திய கௌரவ தலைவர் திரு ராஜ் சேகர் கற்பூர சுந்தர பாண்டியன், அகில இந்திய தலைவர் திரு. பரமு, அகில இந்திய செயலாளர் திரு வீரமணி, மாநில அமைப்பாளர் திரு. சுந்தர், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஆர்.ஏ.ராஜ் மற்றும் சூர்யா நற்பணி இயக்க மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்த சூரரைப் போற்று படம் மாபெரும் வெற்றி அடைந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு தற்சமயம் சூர்யா 40 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் சூர்யா முதன்முறையாக இணையும் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.