www.garudavega.com
iTechUS

"நான் பரதேசியா போகவேண்டியது.. அவங்க மட்டும் இல்லைன்னா".. உருக்கமாக பேசிய நடிகர் சிவகுமார்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உழவன் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற உழவன் விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் சிவகுமார் தனது சிறுவயது காலம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

Actor Sivakumar reveals his childhood memories

                               Images are subject to © copyright to their respective owners.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக அறியப்படுபவர் சிவகுமார். 1965 ஆம் ஆண்டு காக்கும் கரங்கள் படத்தின் மூலமாக சினிமா உலகில் கால்பதித்தார் சிவகுமார். அந்த காலம் துவங்கி தற்போது கோலிவுட் சினிமாவில் வலம்வரும் பல முன்னணி நடிகர்களுடன் சிவகுமார் இணைந்து நடித்திருக்கிறார். நடிப்பு மட்டும் அல்லாமல் தமிழ் இலக்கிய பேச்சிலும் இவர் கொண்டாடப்படுகிறார். இவருடைய மகன்களான நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக அறியப்படுகின்றனர்.

எளிய மாணவர்களின் படிப்பு கனவை நிறைவேற்ற அகரம் அறக்கட்டளை மூலமாக சூர்யாவும், உழவன் அறக்கட்டளை மூலமாக விவசாயிகளுக்கு நடிகர் கார்த்தியும் உதவி வருகின்றனர். இந்நிலையில், உழவன் அறக்கட்டளை சார்பில் உழவன் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றிருக்கிறது. அதில் கலந்துகொண்ட சிவகுமார் தன்னுடைய சிறுவயது காலம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

சிறுவயதில் தன்னுடைய கிராமத்தில் மின்சார வசதி இல்லாத நேரத்திலும் வாழ்ந்ததாக குறிப்பிட்ட சிவகுமார், அப்போது சாப்பிட்ட சத்தான உணவுகளின் காரணமாகவே இப்போதும் நலமுடன் இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தங்களுடைய வீட்டில் வளர்ந்த கால்நடைகள் குறித்தும் அவற்றுடன் தான் கொண்ட பிணைப்பு பற்றியும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

கிராமத்தில் வாழ்வதே சிறப்பு என கூறிய சிவகுமார் தன்னுடைய தாய் குறித்து உருக்கமாகவும் சில விஷயங்களை தெரிவித்தார். தான் பிறந்த சிறிது காலத்திலேயே தனது தந்தையை இழந்ததாகவும் தாயின் அரவணைப்பிலேயே தான் வளர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து தனது தாய் பற்றி பேசிய அவர், தன்னை படிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய தாய் 7 வருடங்களாக கேழ்வரகை மட்டுமே உண்டு வந்ததாக நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இறுதியாக தனது மனைவி பற்றி நடிகர் சிவகுமார் பேசுகையில்,"தாய் தான் கடவுள். அந்த தாய் போட்ட பிச்சையால தான் உங்க முன்னாடி நிக்குறேன். அந்தமாதிரி இங்க ஒரு தாய் இருக்கிறா. நான் பரதேசி பையன். கல்யாணம் பண்ணிக்கிற ஆசையெல்லாம் கிடையாது. அந்த காலத்துல ஓவியம் வரைஞ்சுகிட்டு திருவண்ணாமலைக்கு போய் தாடி வளர்த்துக்கலாம்-னு நெனச்சேன். கடவுள் என்னைய கல்யாணம் பண்ண வச்சுட்டாரு. இந்தம்மா மூலமா இரண்டு பசங்க வந்ததுனால தான் உழவன் அறக்கட்டளையும், அகரம் அறக்கட்டளையும் வந்திருக்கு. சாமியாரா போகவேண்டிய என்னை இந்த அம்மா மாத்தி இரண்டு பசங்களை கொடுத்திருக்காங்க. எப்படி பார்த்தாலும் அன்று என் தாய் வணங்க வேண்டியவள். இன்று என் மனைவி வணங்க வேண்டியவள்" என உணர்ச்சிபொங்க பேசினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Sivakumar reveals his childhood memories

People looking for online information on Actor Karthi, Sivakumar, Uzhavan foundation will find this news story useful.