சினிமாவில் சிவாவின் 10 ஆண்டுகள் - ”இனிதான் ஆரம்பமே” - அனிருத் அளித்த பாசிடிவ் கமெண்ட்
நேருக்கு நேர்.. சுஜா - தாமரை.. BiggBoss வீட்டை ஆட்டம் காண வைத்த வாக்குவாதம்.!
சினிமாவின் போஸ் பாண்டி, நடிப்பின் டாக்டர், டான்ஸின் டான் என நடிப்பில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் தான் சிவகார்த்திகேயன். சினிமாவில் தனக்கே உரிய பாணியில் நடிப்பிலும் சரி, தற்போது நடனத்திலும் சரி மிகச் சிறந்த இடத்தை பிடித்துள்ளார். ஆரம்பத்தில் துணை நடிகராக சினிமாவில் அடியெடுத்து வைத்த சிவகார்த்திகேயன் சிறந்த நடிப்பாற்றளால் உயரத்தை தொட்டவர்.
பல்வேறு கதைகளை தேர்ந்தெடுத்து அதற்கான முழு உழைப்பை செலுத்தி, அனைவரையும் கவர்ந்துள்ளார். பல வயது ரசிகர்களை தன் நடிப்பாற்றளால் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
தற்போது, சினிமா பயணத்தில் நுழைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை அவரது, ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். நம்பிக்கையே மூலதனம் எனத் தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன், அதில், முதலில் ஹீரோவாக அறிமுகம் செய்த் இயக்குனர் பாண்டியராஜிற்கு நன்றி தெரிவித்ததோடு, வாய்ப்பளித்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும், உடன் நின்று பயணித்த இயக்குனர்களுக்கும், தன்னோடு சேர்த்து என்னையும் மிளிர செய்த சக கலைஞர்களுக்கும், என் படங்களில் பணியாற்றிய அனைத்து தொழிலாளர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும்,
பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களும், மேலும் அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் அவரது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
எல்லாவற்றிக்கும் மேலாக தாய் தமிழுக்கும், என்னை மகனாக, சகோதரனாக, நண்பனாக, குடும்பமாக ஏற்றுக் கொண்ட தமிழ் மக்களுக்கும், என் ஆரம்ப காலம் முதல் என்னுடைய வெற்றி அனைத்திலும் உடன் இருந்து என்னை கொண்டாடும் ரசிகர்களான உங்களுக்கும் என்னுடைய பெரிய நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
நான் எப்போதும் செய்ய நினைப்பது என்னவென்றால், இன்னும் கடினமாக உழைத்து உங்களை மகிழ்விப்பதும், நீங்கள் அளித்திருக்கும் இந்த வாழ்வை, பிறருக்கும் பயன்படுமாய் வாழ்வது மட்டுமே எனத் தெரிவித்துள்ளார், இதற்கு சிவகார்த்திகேயனின் நண்பரான இசையமைப்பாளர் அனிருத், அவரது பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக இனிதான் ஆரம்பம் எனப் பாசிடிவ் கமெண்ட் கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயனின் முக்கிய பாடல்கள் ஹிட்டுக்கு இருவரின் பங்குகள் அதிகம், அதனைப் பல இடங்களில் இருவரும் வெளிக்காட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக, பாடகராக எனப் பல அவதாரம் எடுத்ததற்கும், அதனை வெற்றிக் கூட்டணியாக்கி வெற்றி பாதை அமைத்ததற்கும் அனிருத் இசை ஒரு முக்கிய அம்சமாகும்.