தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் சாந்தனு பாக்யராஜ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பாவக்கதைகல் கவனத்தைப் பெற்றது.
Also Read | ஒருநாள் முன்கூட்டியே அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் "டான்".. வெளியான சூப்பர் தகவல்! FANS HAPPY
சாந்தனு…
பாக்யராஜின் மகனான சாந்தனு குழந்தை நட்சத்திரமாக ‘வேட்டிய மடிச்சு கட்டு’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் கதாநாயகனாக ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த ‘சக்கரக்கட்டி’ படத்தில் அறிமுகமானார். அந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின. அதன் பின்னர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான வானம் கொட்டட்டும், மாஸ்டர் மற்றும் பாவக்கதைகள் ஆந்தாலஜி ஆகியவற்றின் மூலம் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளார்.
பாவக்கதைகள்…
பாவக்கதைகள் ஆந்தாலஜியில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சாந்தனு, காளிதாஸ் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'தங்கம்' பாராட்டுகளைக் குவித்துள்ளது. மூன்றாம் பாலினத்தவர் பற்றிய இந்த படம் பார்ப்பவர்கள் மனதை உருக்கும் வண்ணம் இருந்தது. அதிலும் முக்கியமாக காளிதாஸ் மற்றும் சாந்தனுவின் சிறப்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
சாந்தனுவின் அடுத்த படம்…
இதையடுத்து சாந்தனு தற்போது மதயானைக் கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகும் இராவணக் கோட்டம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கும் “இராவணகோட்டம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரச்சனை…
இந்நிலையில் தற்போது சாந்தனு வெளியிட்டுள்ள டிவீட் ஒன்று இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “என்னுடைய அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. யாரும் அந்த கணக்கில் இருந்து வரும் செய்திகளுக்கு ரியாக்ட் செய்யவேண்டாம். மீண்டும் கணக்கு திரும்பப் பெறப்பட்ட அறிவிப்பு வரும் வரை. நன்றி” எனக் கூறியுள்ளார். சமீபகாலமாக நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் சமூகவலைதளக் கணக்குகல் ஹேக் செய்யப்படுவது அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8