நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றிருந்தது.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்து வந்தனர். அப்படி ஒரு சூழலில், நடிகர் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசி இருந்த விஷயங்கள் பெரிய அளவில் தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022 ஆம் தேதியன்று நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஷியாம்," வாரிசு குடும்பத்துல நான் தான் சின்ன பையன். ஆனா என்ன விட ஒரு சின்ன பையன்னா அது விஜய் அண்ணா தான். அவருக்கு வயசு ஏற மாட்டேங்குது. ஆனா அழகு ஏறிட்டே இருக்கு " என ஷியாம் தெரிவிக்க அரங்கத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆரவாரமாக அந்த தருணத்தை கொண்டாடி இருந்தனர்.