பிரபல நடிகர் சத்யராஜின் மகளும் பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யாராஜ், மருத்துவத்துறையில் நிகழும் முறைக்கேடுகள், நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் அவரது சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில்,, ''கொரோனா நேரத்தில் தமிழ் நாட்டில் ரத யாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள் இருக்கிறது. கொரோனா நேரத்தில் ரத யாத்திரையை அனுமதிப்பது நியாயம் கிடையாது.
தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும் உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் ரத யாத்திரையை எதிர்க்கிறேன். மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்களின் உயிர் மீதும் உடல் நலத்தின் மீது இல்லாதது வருத்தமாக இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தமிழக பாஜக சார்பாக ரத யாத்திரை நடத்தப்படுவதாக தகவல் ஒன்று பரவியது குறிப்பிடத்தக்கது.