நடிகர் சசிகுமார் தான் நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்து ஒரு சர்ப்ரைஸ் தகவலை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இதையடுத்து இவர் நடிகராகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். இவர் நடித்த நாடோடிகள், சுந்திர பாண்டியன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தன. இவர் நடிப்பில் கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜ வம்சம், எம்.ஜி.ஆர் மகன் உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன.
இந்நிலையில் நடிகர் சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளார். கிடாரி திரைப்படத்தை இயக்கிய பிரசாத் முருகேசனுடன் இணைந்து எப்போது மீண்டும் படம் பண்ணுவீர்கள் என ரசிகர்கள் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சசிகுமார், ''சீக்கிரமே அது நடக்கும்'' என பதிலளித்துள்ளார். பிரசாத் முருகேசன் , கவுதம் மேனனுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் குயின் வெப் தொடரை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
It’ll happen soon 😊 https://t.co/Ld2RYhb5xQ
— M.Sasikumar (@SasikumarDir) June 6, 2020