நடிகர் சரத்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் செம வைரல் அடித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கி வந்தவர் நடிகர் சரத்குமார். இவர் நடித்த சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக உள்ளிட்ட படங்கள் எவர்க்ரீன் க்ளாசிக் படங்களாக கொண்டாடப்படுகின்றன. அண்மையில் இவர் வானம் கொட்டட்டும் படத்தில் நடித்தார். மேலும் இவர் வெப்தொடர் ஒன்றில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது சரத்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் செம வைரல் அடித்து வருகிறது. ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபடி, அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 66 வயதில் இப்படி ஒரு ஃப்ட்னஸ்-ஆ..?, இது சரத்குமாரின் பீஸ்ட் மோட் என்றெல்லாம் நெட்டிசன்ஸ் கமன்ட்ஸ் கொடுத்து வருவதுடன், இந்த போட்டோவும் வைரல் ஆகி வருகிறது.
No excuse 🔥🔥#Sarathkumar pic.twitter.com/XvaCR7azdU
— jeshwin jaisingh (@jeshwinjai) November 17, 2020