நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த 'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023) அன்று திரையரங்குகளில் வெளியானது.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது.
'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது. டார்க் டெவில் என அழைக்கப்படும் அஜித் கதாபாத்திரம், ஒரு நோக்கத்துக்காக வங்கியை கொள்ளையடிக்க முயற்சிக்கும் போது ஏற்படும் சம்பவங்களை அடிப்படையை கதைக்கருவாக கொண்டது துணிவு திரைப்படம்.
துணிவு படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் உரிமத்தை பிரபல கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது. மேலும் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார், இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.
நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி துணிவு படத்தின் ரிலீஸ்க்கு பிறகு முதல்முறையாக நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் துணிவு படம் குறித்து சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக துணிவு படம் பார்த்த பிறகு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வங்கி, பணம், கடன் அட்டைகள் தொடர்பான விழிப்புணர்வு குறித்து பதில் அளித்த சமுத்திரக்கனி, "மக்களுக்கு தேவை தான் முக்கியமா இருக்கும் போது படிவத்தை படித்து பார்க்க மாட்டார்கள். நம்மால் முடிந்ததை சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எல்லாரும் மாறவில்லை என்றாலும் 2-4 பேராவது மாறுவார்கள். 4 பேராவது கவனமாக இருப்பார்கள். எங்கோ ஒருவர்க்கு துணிவு படத்தினால் மாற்றம் வந்தது என்றால் அது தான் படத்தின் வெற்றி" என சமுத்திரக்கனி பதில் அளித்தார்.