உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார் இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்களும் வீட்டில் இருக்கின்றனர். மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றுவதே இந் நோயை ஒழிப்பதற்கான தற்போதைய ஒரே வழி என்று அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்தநிலையில் பத்ரி, வின்னர் போன்ற பல படங்களில் நடித்த நடிகர் ரியாஸ்கான் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் தன்னை கும்பலாக 10 பேர் அடிக்க வந்ததாகவும் அதற்கு காரணம் என்ன என்றும் கூறியுள்ளார். அவரது வீட்டுக்கு வெளியே எவ்வித காரணமும் இன்றி 10 பேர் கும்பலாக நின்று உள்ளனர். கேட்டால் நாங்கள காற்று வாங்க வந்தோம் என்று முன்னுக்கு பின் கூறியுள்ளனர்.
அவர் அவர்களிடம் மெதுவாக "இந்த நேரத்தில் இப்படி நிற்பது தவறு. உங்க வீட்டுக்கு தனித்தனியா கலைந்து செல்லுங்கள்" என்று கூறியுள்ளார். இதனை ஏற்காத அந்த இளைஞர்கள் "எங்களுக்கெல்லாம் கொரோனா வராது" என்று பேசியுள்ளனர். பேச்சு வளர்ந்து ஒரு கட்டத்தில் அவர்கள் நடிகர் ரியாஸ்கான் தலையில் அடிக்க வந்துள்ளனர். அந்த அடி தவறி தந்து தோள் பட்டையில் விழுந்ததாகவும் கூறியுள்ளார். இதனைக் கூறிய அவர் அவர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. இப்படி செய்வது நியாயமா எல்லோரும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்த நோயில் இருந்து நாம் விடுபட முடியும். இந்த நோயினால் யாரும் இறக்கக்கூடாது என்று கூறியுள்ளா.ர் இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.