நடிகர் ரியாஸ் கானும் அவரது மகன் ஷாரிக்கும் தங்களது ஜாலி மொமன்ட்ஸ்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் ரியாஸ் கான். கஜினி, வின்னர் உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் நடிகை உமா ரியாஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் ஷாரிக் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ளதுடன், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரியாஸ் கானும், ஷாரிக்கும் நம்மிடன் வீடியோ கால் மூலம் உரையாடினர். அப்போது ரியாஸ் கான் கூறியதாவது, ''எனக்கும் உமாவுக்கு கலப்பு திருமணம் என்பதால், இரண்டு குடும்பங்களிலும் மனஸ்தாபம் இருந்தது. நான் உமாவை கடத்திட்டு வந்து கல்யாணமே செய்தேன். அதற்கு பிறகு ஷாரிக் பிறந்த பிறகுதான், இரண்டு குடும்பங்களும் மீண்டும் சேர்ந்தோம். அதனால் ஷாரிக்கை எங்கள் குடும்பமே ரொம்ப செல்லமாக வளர்த்தது'' என பகிர்ந்து கொண்டார்.
மேலும் நந்தினி சீரியலில் திருநங்கையாக நடித்தது குறித்தும், அப்பாவுடனான தனது உறவு குறித்து செம ஜாலியாக உரையாடினார் இளம் நடிகர் ஷாரிக்.