பிரபல நடிகரின் திருமண நாள் குறித்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ராணா டகுபதி. இவர் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம், தமிழ் சினிமாவில் பிரபலமானார். இவர் தமிழில் அஜித்துடன் ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ராணா அண்மையில், தான் மிஹீகா பஜாஜ் என்பவரை திருமணம் செய்ய போவதாக அறிவித்தார். இருவருக்கும் இதையடுத்து சிறிய அளவிளான நிச்சயதார்த்த நிகழ்வு ஏற்பட்டது. இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 8-ஆம் தேதி, நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து, திருமண நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அரசாங்க விதிகளுக்குட்பட்டு, ஹைதராபாத்தில் இந்த திருமணம் நடைபெறவுள்ளதாகவும் நமது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து நமது புதுமாப்பிள்ளையின் தரப்பில் இருந்து திருமண நாள் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.