டாணாகாரன் படத்தைப் பற்றி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பாராட்டி டிவீட் செய்துள்ளார் நடிகர் ரமேஷ் திலக்.
அந்த தலைப்பை மாற்ற சொன்னார்கள்…. ஆடியோ ரிலீஸில் மனம் திறந்த ’வாய்தா’ இயக்குனர்!
முன்னாள் போலீஸ் இயக்கிய டாணாகாரன்…
விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள டாணாகாரன் திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஏப்ரல் 8 (நாளை) ஆம் தேதி வெளியாகிறது. காவல்துறை பயிற்சி பள்ளியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. படத்தில் விக்ரம் பிரபுவோடு லால், போஸ் வெங்கட், எம் எஸ் பாஸ்கர், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள தமிழ் அரசன் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்பீம் மற்றும் அசுரன் ஆகிய படங்களில் நடிகராகவும் தமிழ் அரசன் கவனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் லால், எம்.எஸ். பாஸ்கர், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். மகேஷ்மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். எஸ் ஆர் பிரபுவின் பொட்டன்ஷியல் ஸ்டுடீயோஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
கவனம் ஈர்த்த டிரைலரும் பாடலும்…
இந்த படத்தின் டிரைலரை கடந்த வாரம் நடிகர் கார்த்தி இணையத்தில் வெளியிட்டார். போலீஸ் டிரெய்னிங் இடத்தில் நடக்கும் மோசமான சம்பவங்களையும் அதை எதிர்த்து எப்படி விக்ரம் பிரபு போராடுகிறார் என்பதையும் விறுவிறுப்பாக டிரைலரில் காட்சிப் படுத்தி இருந்தனர். டிரைலர் இதுவரை 3 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் இந்த படத்தில் இருந்து துடித்தெழு தோழா என்ற பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் நாளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
படத்தைப் புகழ்ந்த ரமேஷ் திலக்….
இந்நிலையில் இந்த படம் பற்றி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சூதுகவ்வும் மற்றும் ஒருநாள் கூத்து ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகர் ரமேஷ் திலக் புகழ்ந்து பேசியுள்ளார். அவரின் டிவிட்டர் பக்கத்தில் ‘நல்லா நடிக்கத் தெரிஞ்சும் ரொம்ப நாளா கும்பல்ல நின்னுகிட்டு இருக்குற துனை நடிகர்களில் சிலர தூக்கி விட்டதுக்கே இந்த படமும் இந்த இயக்குனரும் வெற்றி அடையனும் அடைவார்கள்.ரொம்ப நல்ல படம்’ என பாராட்டி பேசியுள்ளார். பல திரைத்துறையினரை சேர்ந்தவர்களும் இந்த படத்தைப் பார்த்து பாராட்டி பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஹீரோக்களை திட்டுவது தவறு”…. “விஜயகாந்த் போல யாரும் இல்லை”… ஆர் வி உதயகுமார் அதிரடி பேச்சு!