நடிகர் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
உங்களுக்கு எல்லாமே தெரியும்..தாமரை, சுரேஷ் நடுவுல சண்டை ஸ்டார்ட்.. "ப்ரோமோ சும்மா பத்திக்குது"
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராதே ஷ்யாம்
பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இன்று வெளியாகி உள்ளது. பாகுபலி படத்தின் வெற்றியால் பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்துக்கு இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் மற்றும் தமனின் மனதை உருக்கும் இசையில், மதன் கார்க்கியின் வசனம் மற்றும் பாடல்களில் உருவாகியுள்ள இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த படத்தில் பிரபாஸ் உலகின் நம்பர் 1 கைரேகை நிபுணராக நடித்துள்ளார். அவரின் காதலியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இத்தாலி, ஜார்ஜியா மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்ட அழகிய காட்சிகள், சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இடையேயான கெமிஸ்ட்ரி ஆகியவை இப்படத்தின் முக்கிய அம்சங்களாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
ராதே ஷ்யாம் பற்றி இயக்குனர்
’காலமும் காதலும் முடிவே இல்லாத ஒரு போரில் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக் காலத்தைக் கணிக்கும் ஒரு கவிஞன் தன் கணிப்புக்குள் சிக்காத ஒரு காதலில் விழுந்தால், அவளது அழகில் மயங்கும்போது அவன் கணிப்புகள் பொய்யாகுமா? கனவு கலையும்பொழுது கணிப்பு மெய்யாகுமா? விடையில்லாத சில கேள்விகள் எப்போதும் இந்தக் காற்றில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. காலம் வெல்லுமா? காதல் வெல்லுமா? எனும் கேள்விக்கு வெள்ளித் திரையில் விடைகூற வருகிறது ராதே ஷ்யாம்.’ காதலர்களுக்கு ராதே ஷ்யாம் திரைப்படம் ஒரு மறக்கமுடியாத விருந்தாக அமையும் என்று இயக்குநர் ராதா கிருஷ்ணகுமார் கூறியிருந்தார்.
ராதே ஷ்யாம் படத்தில் ரகுவரன்
இந்நிலையில் இன்று படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்போடு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு விஷயம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. படத்தில் கதாநாயகன் பிரபாஸின் தந்தையாக மறைந்த மூத்த நடிகர் ரகுவரனின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதுபோல மறைந்த நடிகர்களை தங்கள் படங்களில் பயன்படுத்துவது அவர்களுக்கு செய்யும் மரியாதையாக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒருவரான நடிகர் ரகுவரன் வில்லன், குணச்சித்திரம் என எல்லா வேடங்களிலும் நடித்து தன்னுடைய முத்திரையைப் பதித்தவர். அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரபிக் குத்து Reels…. செம்ம ஆட்டம் போட்ட முன்னாள் CSK வீரர் – நெல்சன் பகிர்ந்த வீடியோ!