நடிகர் பிருத்விராஜ் behindwoods சேனலுக்கு கொடுத்த நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
பிருத்விராஜ் நடிக்கும் கடுவா
நடிகர் மற்றும் இயக்குனர் பிருத்விராஜ், மலையாள சினிமா மட்டும் இல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர். அவர் நடித்த மொழி, கண்ட நாள் மற்றும் ராவணன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்தவர். பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ள அவர் தற்போது கடுவா என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழிலும் டப் ஆகி வெளியாக உள்ளது.
Exclusive நேர்காணல்
இதையடுத்து பிருத்விராஜ் Behindwoods சேனலுக்கு கொடுத்துள்ள பிரத்யேக நேர்காணலில் பேன் இந்தியா திரைப்படங்கள், தனது படங்கள் மற்றும் இயக்குனர் ஆக அடுத்த படங்கள் பற்றி பல சுவையான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “இப்போது மற்ற மொழி திரைப்படங்களைப் போல மலையாள சினிமாவுக்கும் நல்ல கவனம் கிடைத்துள்ளது. எங்களது படங்களின் பட்ஜெட்டும் அதிகமாகியுள்ளது. சமீபத்தில் ரிலீஸான விக்ரம் திரைப்படம், கேரளாவில் எந்தவொரு சூப்பர்ஹிட் மலையாள படத்துக்கு நிகராக வசூல் செய்துள்ளது. லோகேஷ் புத்திசாலித்தனமாக கமல்சாரை மிகவும் புதிதாகக் காட்டியுள்ளார்.” எனக் கூறினார். பின்னர் ‘விக்ரம்’ திரைப்படத்தை தான் மலையாளத்தில் இயக்கினால் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானை நடிகக் வைப்பேன் எனக் கூறியுள்ளார். முன்னதாக விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் மலையாளத்தில் விக்ரம் படத்தை இயக்கினால் அதில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் பிருத்விராஜை நடிக்க வைப்பேன்.
விக்ரம் மலையாள வெற்றி
விக்ரம் திரைப்படம் மலையாளத்தில் விக்ரம் ஹிட்லிஸ்ட் என்ற பெயரில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது 25 நாட்களைக் கடந்துள்ள நிலையிலும் வெற்றிகரமாக 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருப்பதாக விநியோகஸ்தர் ஷிபுதமீன்ஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.